வடசென்னையில் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டி திரண்டு வந்த போட்டியாளர்கள்!

Mar 22, 2026 - 15:32
 0
வடசென்னையில் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டி
திரண்டு வந்த போட்டியாளர்கள்!

சமையலைக் கொண்டாடும் பிரம்மாண்ட மேடை, சக்தி மசாலா வழங்கும் 'அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார்' சீசன் 3 தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியை சக்தி மசாலா, சௌபாக்யா அப்ளையன்சஸ், ஆர். கே. ஜி நெய், கோல்ட் வின்னர், கோஹினூர் பாசுமதி அரிசி, நாகா, எக்ஸோ, சுப்ரீம் ஃபர்னிச்சர், இண்டேன், மெரிபா பனீர், சக்ரா கிரிடிகல் கேர் அண்ட் ஹாஸ்பிடல் ஆகியவை இணைந்து வழங்குகின்றன.

வடசென்னையில் சமையல் சூப்பர் ஸ்டார்

விழுப்புரம், புதுச்சேரி, சேலம், கோயமுத்தூர், வேலூர், மதுரை, திருநெல்வேலி, ஈரோடு, திருச்சி, திண்டுக்கல், தென் சென்னையை தொடர்ந்து, இன்று வடசென்னை கொளத்தூரில் உள்ள பௌர்ணமி மகாலில் போட்டி நடைபெற்று வருகிறது. வித விதமான உணவுகளுடன் ஆண்களும் பெண்களும் தங்கள் சமையல் திறமையை காட்சிப்படுத்த வருகை தந்துள்ளனர்.

நிகழ்ச்சியின் நடுவராக தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தள பிரபலம் செஃப் தீனா பங்கேற்றுள்ளார்.நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து அவர் பேசியது,“இன்றைய காலத்தில் நாம சாப்பிடுற உணவு வேகமா தயாராகணும், ருசியா இருக்கணும், பார்க்கவும் நல்லா இருக்கணும்னு விரும்புறோம்.ஆனால் அது உடலுக்கு நல்லதா என்ற கேள்வி பலருக்கும் வருவதில்லை.

வடசென்னையில் சமையல் சூப்பர் ஸ்டார்

நாம் சாப்பிடுற உணவுல என்னென்ன பொருள்கள் இருக்கு? ஏன் அந்த பொருள் சேர்க்கப்படுகிறது? அதை ஆராய்ந்து பார்த்தா தான் நல்ல உணவைத் தேர்வு செய்ய முடியும்.சமையல் சூப்பர் ஸ்டார் சீசன்களில் பங்கேற்றவர்களிடம் இருந்து நான் இதுவரைக்கும் 42 புதிய ரெசிபிகளை தெரிந்து கொண்டிருக்கிறேன்” என்றார்.

போட்டியில், பெரம்பூர், பள்ளிக்கரணை, கொளத்தூர், மதுரை, ராமாபுரம், மாதவரம், அம்பத்தூர்,விருகம்பாக்கம் என சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மதுரை போன்ற பிற ஊர்களில் இருந்தும் போட்டியாளர்கள் வந்து கலந்துகொண்டுள்ளனர். போட்டியாளர்கள் சமைத்து கொண்டுவந்த உணவுகளை சுவை பார்த்து, செஃப் தீனா மதிப்பெண் வழங்கி வருகிறார்.

வடசென்னையில் சமையல் சூப்பர் ஸ்டார்

ராகி சிமிலி, மீன் சம்பல், ராகி பனீர் மோமோஸ், கார அரிசி புட்டு, பால் கொழுக்கட்டை, வெற்றிலை லட்டு எனப் பலவகை உணவுகளும் கட்சிப்படுத்தப்பட்டுள்ளன. முதல் சுற்றில் தேர்வாகும் பத்து பேர், அரங்கில் நடக்கும் நேரடி சமையல் போட்டியில் பங்கேற்பார்கள். போட்டியாளர்களை உற்சாகப்படுத்த, நிகழ்ச்சியின் நடுவே விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0