CSK: 18 ஆண்டுகாலப் பயணம்; 5 முறை கோப்பை வென்ற பயிற்சியாளர் - சிஎஸ்கேவில் இருந்து விலகிய ஃப்ளெமிங்

Jul 13, 2026 - 15:32
0
CSK: 18 ஆண்டுகாலப் பயணம்; 5 முறை கோப்பை வென்ற பயிற்சியாளர் - சிஎஸ்கேவில் இருந்து விலகிய ஃப்ளெமிங்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஸ்டீபன் ஃப்ளெமிங் விலகுவதாக சிஎஸ்கே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான இவர், 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் சிஎஸ்கே அணியின் தொடக்க வீரராகத் தனது பயணத்தைத் தொடங்கினார்.

ஸ்டீபன் ஃப்ளெமிங்
ஸ்டீபன் ஃப்ளெமிங்

அதனைத் தொடர்ந்து, 2009 ஆம் ஆண்டு அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்று, கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தப் பதவியில் வெற்றிகரமாக நீடித்தார்.

இவரது அசாத்தியமான வழிகாட்டுதலின் கீழ், சென்னை அணி 5 முறை ஐபிஎல் கோப்பைகளையும், 2 முறை சாம்பியன்ஸ் லீக் டி20 பட்டங்களையும் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது.

மேலும், 12 முறை பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றதோடு, 10 முறை இறுதிப்போட்டி வரை முன்னேறி ஐபிஎல்-இன் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியது.

இந்நிலையில், தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஃப்ளெமிங் விலகியதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டீபன் ஃப்ளெமிங்
ஸ்டீபன் ஃப்ளெமிங்

இதுதொடர்பாக சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஸ்டீபன் ஃப்ளெமிங் மற்றும் சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் இடையே நடைபெற்ற வெளிப்படையான மற்றும் நேர்மையான தொடர் ஆலோசனைகளுக்குப் பிறகு, அவர் விலகுவதாக முடிவெடுத்துள்ளார்.

இந்திய பிரீமியர் லீக் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான மற்றும் நீண்டகாலக் கூட்டணி ஒன்று முடிவுக்கு வருகிறது" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User