பூட்டிக்கிடந்த கடைக்குள் கள்ள நோட்டு மிஷின்; ரூ.37 லட்சத்திற்கு கள்ள நோட்டுக்களை அச்சடித்த நபர்

Oct 25, 2026 - 17:00
0
பூட்டிக்கிடந்த கடைக்குள் கள்ள நோட்டு மிஷின்; ரூ.37 லட்சத்திற்கு கள்ள நோட்டுக்களை அச்சடித்த நபர்

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் திரிமூர்த்தி நகரில் வசித்து வந்தவர் புஷ்பக் கிருஷ்ணா. இவர் கார்பி என்ற இடத்தில் கடை ஒன்றை வாடகைக்கு வாங்கி இருந்தார்.

ஒன்றரை ஆண்டுகளாக வாடகை செலுத்தி வந்தார். ஆனால் சமீபத்தில் வாடகை ஒப்பந்தம் முடிந்ததைத் தொடர்ந்து அவர் வாடகை செலுத்துவதை நிறுத்திவிட்டார். பல மாதங்களாக வாடகை கொடுக்காததால் கடையைக் காலி செய்யும்படி உரிமையாளர் ரமேஷ் கூறியபோது, ​​புஷ்பக் கத்தியைக் காட்டி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ரமேஷ் இது குறித்து போலீஸில் புகார் செய்தார்.

வாடகைதாரர் புஷ்பக் நீண்ட நாட்களாக அறைக்கு வராததால், உரிமையாளர் சுத்தியலால் பூட்டை உடைத்துள்ளார். உள்ளே நுழைந்ததும், ஒரு வாளிக்குள் கரன்சி நோட்டுக் கட்டுகள், சிதறிக் கிடந்த காகிதத் தாள்கள் மற்றும் அறையில் நிறுவப்பட்டிருந்த பிரிண்டர் ஆகியவற்றைக் கண்டார்.

உடனே ரமேஷ் இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் சோதனை செய்தபோது, போலியான 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மீட்கப்பட்ட பணத்தின் அளவை மதிப்பிட எண்ணும் இயந்திரம் கொண்டு வரப்பட்டது. ஆரம்பக்கட்ட விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர் 37 லட்சம் ரூபாய் மதிப்பிலான போலி நோட்டுகளை அச்சடித்ததாகக் கூறப்பட்டது. இது தவிர பாதி அச்சிடப்பட்ட கரன்சி நோட்டுகள் மற்றும் அச்சிடும் பொருட்களையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மீட்கப்பட்ட நோட்டுகள் மற்றும் பொருட்களின் மொத்த மதிப்பு தோராயமாக ரூ. 48 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதில் ஒருபுறம் மட்டும் அச்சிடப்பட்ட நோட்டுகளும் இருந்தன. போலீசார் முழு பொருட்களையும் கைப்பற்றி புஷ்பக்கைத் தேடி வந்தனர். விசாரணை அதிகாரிகள் அவரைத் தொடர்பு கொண்டபோது, ​​அவர் மும்பையில் இருப்பது தெரியவந்தது. அவரைக் கண்டுபிடித்து கைது செய்ய போலீஸ் குழு மும்பைக்கு அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User