'குக்கர் பரிசு, அறுசுவை விருந்து' - தொகுதி மக்களை 'வெயிட்டாக' கவனித்த அமைச்சர் ஆனந்த்!

May 25, 2026 - 15:31
0
'குக்கர் பரிசு, அறுசுவை விருந்து' - தொகுதி மக்களை 'வெயிட்டாக' கவனித்த அமைச்சர் ஆனந்த்!

தி.நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அத்தொகுதியின் எம்.எல்.ஏவும் நீர்வளத்துறை அமைச்சருமான என்.ஆனந்த் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் தொகுதி மக்களுக்கு 'குக்கர்' பரிசு வழங்கி உற்சாகமூட்டியிருந்தார்.

அமைச்சர் ஆனந்த்
அமைச்சர் ஆனந்த்

மேதாது அணை விவகாரம் தொடர்பாக முதல்வர் விஜய் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தியிருந்தார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகளுடன் கலந்துகொண்டிருந்தார் அமைச்சர் என்.ஆனந்த்.

அந்தக் கூட்டத்தை முடித்துவிட்டு மதியம் 12 மணிக்கு மேல் தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தைத் திறப்பதற்காக வருகை தந்தார்.

சிறப்புப் பூஜைகளை முடித்துவிட்டு அலுவலகத்தைத் திறந்த என்.ஆனந்த், அங்கு கூடியிருந்த தொகுதி மக்களுக்கு 2000 ரூபாய் மதிப்புள்ள 3 லி 'குக்கர்'களைப் பரிசாக வழங்கினார்.

குடும்ப அட்டையின் அடிப்படையில் 105 குடும்பங்களுக்கு குக்கர் வழங்கிய அமைச்சர் ஆனந்த், அவர்களுக்கு அறுசுவை மதிய விருந்தையும் வழங்கினார்.

அமைச்சர் ஆனந்த்
அமைச்சர் ஆனந்த்

இந்த நிகழ்வை முடித்த பிறகு அமைச்சர் ஆனந்திடம் மேகதாது அணை விவகாரம் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் கூறியவர், ''எங்கள் நிலைப்பாடுகள் சம்பந்தமாக விளக்கமளிக்க செய்தித்தொடர்பாளர்களை நியமிப்போம். என்னுடைய துறை சார்ந்த விவகாரங்களை அறிக்கையாக கொடுப்பேன்'' என்று மட்டும் கூறிவிட்டு சென்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User