கோவை: 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; சாட்சி விசாரணை 24ஆம் தேதி முதல் துவக்கம்

Jun 16, 2026 - 15:32
0
கோவை: 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; சாட்சி விசாரணை 24ஆம் தேதி முதல் துவக்கம்

கோவை மாவட்டம் சூலூரில் கடந்த மே மாதம் 21ஆம் தேதி 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான கார்த்திக் மற்றும் அவருக்கு உதவிய மோகன்ராஜ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், இருவருக்கும் 819 பக்க குற்றபத்திரிக்கை வழங்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், இருவர் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இதனையடுத்து இன்று இந்த வழக்கை விசாரித்த போக்சோ நீதிமன்ற நீதிபதி, சாட்சி விசாரணை வரும் 24 ஆம் தேதி முதல் துவங்க உத்தரவிட்டார்.

மேலும் குற்றம்சாட்டப்பட்ட கார்த்தி, மோகன்ராஜ் ஆகிய இருவரையும் வரும்  24 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்திரவிட்டார். சிறுமி கொலை வழக்கில் விரைவாக குற்றபத்திரிக்கை தாக்கல் செய்த போலீசார், வழக்கை விரைவாக நடத்தி குற்றவாளிகள் இருவருக்கும் அதிகபட்ச தண்டணை பெற்று தர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதனால் இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User