Chennai Rain: 95% வெள்ள நீரை அகற்றிவிட்டோம்;நேரில் வந்த முதல்வர் விஜய் -அப்டேட் கொடுத்த அதிகாரிகள்!

Oct 18, 2026 - 17:30
0
Chennai Rain: 95% வெள்ள நீரை அகற்றிவிட்டோம்;நேரில் வந்த முதல்வர் விஜய் -அப்டேட் கொடுத்த அதிகாரிகள்!

நேற்று சென்னையில் பொழிந்த அதி கனமழையை தொடர்ந்து இன்று ரிப்பன் பில்டிங்கின் மழைநேர அவசரக்கால கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் விஜய் ஆய்வு செய்திருந்தார்.

CM Vijay
CM Vijay

சென்னையில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை அதி கனமழை பொழிந்திருந்தது. அதிகபட்சமாக பாரிஸில் 36 செ.மீக்கும் மேல் மழை பொழிந்திருந்தது. இன்றும் இரவுக்கு மேல் சென்னையில் மிக கனமழை பெய்யும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் ரிப்பன் பில்டிங்கில் செயல்பட்டு வரும் மழைநேர அவசரக்கால கட்டுப்பாட்டு அறையை முதல்வர் விஜய் ஆய்வு செய்திருக்கிறார். முதல்வரின் ஆய்வின் போது அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா அருண்ராஜ், ராஜ்மோகன், குமார் ஆகியோர் உடனிருந்தனர். தலைமைச் செயலாளர் சாய்குமார், நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, மாநகராட்சி ஆணையர் சமீரன் ஆகியோர் முதல்வருக்கு மழை வெள்ள நிலவரத்தை எடுத்துக் கூறினர்.

CM Vijay
CM Vijay

குறிப்பாக, மழை வெள்ளம் தேங்கியிருந்த 95% இடங்களில் வெள்ள நீர் அகற்றப்பட்டிருப்பதாக முதல்வரிடம் கூறியிருக்கின்றனர். மக்களை தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் முகாம்கள், உணவு தயார் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சமையற் கூடங்கள் போன்றவற்றை பற்றியும் முதல்வருக்கு விளக்கியிருக்கின்றனர். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட முதல்வர், 'மழை வெள்ளத்தால் மக்களுக்கு எந்தவித சிரமமும் ஏற்படாததை உறுதி செய்யுங்கள்' என அறிவுரை கூறிவிட்டு கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கைத்தட்டி பாராட்டும் தெரிவித்திருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User