லஞ்சமும் டிஜிட்டல் மயம்! தாம்பரத்தில் ‘ஜிபே’ மூலம் பணம் வாங்கிய மின்வாரிய அதிகாரி சஸ்பெண்ட்

Jun 16, 2026 - 10:01
0
லஞ்சமும் டிஜிட்டல் மயம்! தாம்பரத்தில் ‘ஜிபே’ மூலம் பணம் வாங்கிய மின்வாரிய அதிகாரி சஸ்பெண்ட்

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் காவல் எல்லைக்குட்பட்ட கவுரிவாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக (ஏ.இ) பணிபுரிந்து வந்தவர் பத்மாவதி.

இவர் புதிய மின் இணைப்பு வழங்குவதற்காக வாடிக்கையாளர் ஒருவரிடம் லஞ்சப் பணம் கேட்டுப் பேரம் பேசியுள்ளார். மேலும், அந்த லஞ்சத் தொகையை ‘ஜிபே’ (Gpay) டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பெற்றுள்ளார்.

இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், மிக வேகமாக வைரலானது.

லஞ்சம்
லஞ்சம்

இந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் மின்வாரிய உயர் அதிகாரிகள் உடனடியாக அதிரடி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, உதவி பொறியாளர் பத்மாவதியைப் பணியிடை நீக்கம் செய்து உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

டிஜிட்டல் முறையில் லஞ்சம் வாங்கி அதிகாரி சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது பத்மாவதி மற்றொரு வாடிக்கையாளரிடமும் லஞ்சம் வாங்கும் புதிய வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் மின்வாரிய வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User