BJP: "பாமக 7, பாஜக 4" - அதிமுக கூட்டணியில் யார், யார் முன்னிலை? தற்போதைய நிலவரம் என்ன?

May 04, 2026 - 11:32
0
BJP: "பாமக 7, பாஜக 4" - அதிமுக கூட்டணியில் யார், யார் முன்னிலை? தற்போதைய நிலவரம் என்ன?

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கையில், அதிமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையை நோக்கித் தீவிரமாக முன்னேறி வருகிறது.

10:15 மணி நிலவரப்படி, அதிமுக கூட்டணி 80 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருக்கிறது. இதில், பாஜக போட்டியிட்ட 27 தொகுதிகளில் 4 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. 18 தொகுதிகளில் களம் கண்ட பா.ம.க, 7 தொகுதிகளில் வலுவான முன்னிலை பெற்றுள்ளது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

11 தொகுதிகளில் போட்டியிட்ட டி.டி.வி. தினகரனின் அமமுக, 1 தொகுதியில் மட்டும் முன்னிலை வகிக்கிறது. கூட்டணியில் உள்ள மற்ற சிறிய கட்சிகள் இன்னும் எந்தத் தொகுதியிலும் முன்னிலை பெறவில்லை.

இந்த முடிவுகள் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிற்குப் பெரும் பலத்தைத் தந்துள்ளன. குறிப்பாக, பாமக மற்றும் பாஜகவின் குறிப்பிட்ட தொகுதிகளின் முன்னிலை, அதிமுக கூட்டணியைப் பலப்படுத்தும் வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User