பீகார்: கூட்டுப் பாலியல் கொடுமை; இளம்பெண்ணின் அந்தரங்க உறுப்பில் தோட்டா... கும்பல் அட்டூழியம்!

Jun 19, 2026 - 12:02
0
பீகார்: கூட்டுப் பாலியல் கொடுமை; இளம்பெண்ணின் அந்தரங்க உறுப்பில் தோட்டா... கும்பல் அட்டூழியம்!

பீகார் மாநிலம், பெகுசராய் என்ற இடத்தில் தனது கணவருடன் வசித்து வசித்து வந்த 26 வயது பெண்ணின் வீட்டிற்குள் 6 பேர் கொண்ட கும்பல் இரவு 11மணிக்கு திடீரென அத்துமீறி நுழைந்தது. அந்த கும்பல் வீட்டில் இருந்த அப்பெண்ணின் கணவனை அங்கிருந்த ஒரு அறையில் தள்ளி கதவை அடைத்தது. அந்நேரம் கழிவறை சென்றுவிட்டு வெளியில் வந்த பெண்ணை வாயை பொத்தி அப்படியே தூக்கிக்கொண்டு வீட்டிற்கு வெளியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு வைத்து அவர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.

இதனை எதிர்க்க முயன்றபோது பிளேடால் அப்பெண்ணின் மார்பகத்தை வெட்டினர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிட்டது. பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்களில் அப்பெண் வசித்து வந்த வீட்டின் உரிமையாளரும் ஒருவர்.

இக்கொடூரச் சம்பவம் பாதிக்கப்பட்ட பெண், ''அவர்கள் என்னை வீட்டிற்கு வெளியில் யாரும் இல்லாத இடத்திற்கு தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர். எதிர்ப்பு தெரிவித்தபோது எனது மார்பகத்தில் பிளேடால் வெட்டினர்.

அவர்கள் தப்பிச்சென்ற பிறகு எனது கணவரின் சகோதரியை அழைத்தேன். அவர் வந்து எனது கணவனை வீட்டிற்குள் இருந்து வெளியில் எடுத்தார். நாங்கள் போலீஸில் புகார் செய்தபோது அவர்கள் மருத்துவமனைக்கு செல்லும்படி கேட்டுக்கொண்டனர். நாங்கள் பரூனி மருத்துவமனைக்கு சென்றோம். ஆனால் அங்கிருந்து சர்தார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகும் எனது அந்தரங்க உறுப்பில் தொடர்ந்து வலி இருந்து கொண்டே இருந்தது.

இது குறித்து டாக்டரிடம் சொன்னபோது அந்தரங்க உறுப்பு காயம் அடைந்திருப்பதால் அந்த வலி இருப்பதாக கூறி அனுப்பி வைத்தனர். ஆனால் வீட்டிற்கு சென்ற பிறகும் தொடர்ந்து கடுமையான வலி இருந்தது. எனவே மீண்டும் டாக்டரிடம் சென்றோம். அவர்கள் சோதனை செய்தபோது உள்ளே இருந்து துப்பாக்கி தோட்டா, கல், மரத்துண்டு போன்றவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு எடுக்கப்பட்டது. குற்றம் நடந்தபோது நான் மயங்கிவிட்டதால் எனக்கு நடந்தது தெரியவில்லை.

மூன்று மாதத்திற்கு முன்பும் 3 கிரிமினல்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றனர். ஆனால் அவர்கள் நகை மற்றும் பணத்துடன் ஓடிவிட்டனர்'' என்றார். இது குறித்து போலீஸ் அதிகாரி அனந்த் குமார் கூறுகையில், ''அப்பெண்ணின் வாக்குமூலம் உண்மைதான். அப்பெண் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பிய பிறகும் அவரது அந்தரங்க உறுப்பில் தொடர்ந்து கடுமையான வலி இருந்துள்ளது. அவரது உறுப்புகள் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. ஒரு தோட்டா அதில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்'' என்று தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User