சட்டசபை: "அரசு சிறப்பாகச் செயல்பட, எதிர்க்கட்சிகளுக்குப் பேச வாய்ப்பு தாருங்கள்" - இபிஎஸ்

May 12, 2026 - 13:02
0
சட்டசபை: "அரசு சிறப்பாகச் செயல்பட, எதிர்க்கட்சிகளுக்குப் பேச வாய்ப்பு தாருங்கள்" - இபிஎஸ்

தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகராகப் போட்டியின்றி இன்று ஜே.சி.டி.பிரபாகர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

புதிய சபாநாயகருக்கு எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டசபையில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் சட்டசபையில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "அதிமுக சார்பில் சட்டபேரவை தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தங்களுக்கும், துணைத் தலைவருக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன்.

ஜே.சி.டி.பிரபாகர்
ஜே.சி.டி.பிரபாகர்

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று பாராமல், தாங்கள் இந்தப்பக்கம், அந்தப்பக்கம் என்று சாயாமல் தராசு போல நடுநிலையோடு செயல்படவேண்டும். எந்த அளவிற்கு எதிர்க்கட்சியினருக்குப் பேச வாய்ப்பு கொடுக்கின்றீர்களோ அந்த அளவிற்கு உங்கள் அரசு சிறப்பாகச் செயல்படும்.

மக்களின் பிரச்னைகளை எடுத்துச் சொல்ல நல்ல வாய்ப்பை தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். புதிதாகப் பொறுப்பேற்ற முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், உறுப்பினர்கள் எல்லோருக்கும் என்னுடைய வாழ்த்துகள்" என்று பேசியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User