அருள்வான்: 'ஆரவ்வால் எனக்கு பிரச்னை வந்துவிடக் கூடாது'ன்னு நினைச்சேன், ஏன்னா..!' - அருள்நிதி

Jul 07, 2026 - 12:31
0
அருள்வான்: 'ஆரவ்வால் எனக்கு பிரச்னை வந்துவிடக் கூடாது'ன்னு நினைச்சேன், ஏன்னா..!' - அருள்நிதி

இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தில் அருள்நிதி, ஆரவ், காளி வெங்கட், ரம்யா பாண்டியன், விடிவி கணேஷ் , ஜான் விஜய், பேபி கிருத்திகா, சரவணன், உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இப்படம் ஜுலை 17 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (ஜூலை.6) நடைபெற்றது.

அருள்வான்

அதில் பேசிய அருள்நிதி, ``இந்தப் படத்தின் கதையை இயக்குநர் சொல்லிவிட்டு, ஐந்து நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் போதும் என்றார். பிறகு படப்பிடிப்பு தளத்திற்கு சென்றவுடன் ஐந்து நாள் என்பது பத்து நாளாகவும்... பிறகு 15 நாளாகவும்.. பிறகு 20 நாளாகவும் உயர்ந்தது.

நான் முழு படத்தில் நடித்திருந்தாலும் இது போன்றதொரு கதையை, கதாபாத்திரத்தை என்னால் ஏற்று நடித்திருக்க முடியுமா? என தெரியாது. முதலில் இயக்குநர் கதையை சொல்லும்போது யோசித்தேன்.

பயமாக இருந்தது... ஏனென்றால் ஆரவ்வால் (முதன்மை கதாபாத்திரம்) எனக்கு பிரச்னை வந்துவிடக் கூடாது. என்னால் அவருக்கு பிரச்னை வந்துவிடக் கூடாது என்று நினைத்தேன்.

அருள்நிதி
அருள்நிதி

படம் பார்த்த பிறகு நல்லப் படத்தில் தான் நடித்திருக்கிறோம் என்று தோன்றியது. இந்த படத்தில் முத்துவேல் என்ற மாவட்ட ஆட்சியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். குழந்தைகளுக்கான கல்வியின் அவசியம் குறித்து பேசியிருக்கும் படம். அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்'' என்று பேசியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User