Ali Larijani: ட்ரம்பை தொடர்ந்து சாடி வந்த ஈரான் தலைவர் லரிஜானியைக் கொன்ற இஸ்ரேல் - யார் இவர்?

Mar 18, 2026 - 11:02
 0
Ali Larijani: ட்ரம்பை தொடர்ந்து சாடி வந்த ஈரான் தலைவர் லரிஜானியைக் கொன்ற இஸ்ரேல் - யார் இவர்?

ஈரான் போர் தொடக்கத்தின் முதல் நாளிலேயே (பிப்ரவரி 28), அந்த நாட்டின் உச்ச தலைவர் கமேனி கொலை செய்யப்பட்டார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இந்தச் செயலுக்கு தொடர்ச்சியாக கடும் எதிர்வினையாற்றி வந்தார் அலி லரிஜானி. இவர் ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் ஆவார்.

ட்ரம்ப் மிரட்டலும், லரிஜானியின் பதிலடிகளும்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கவில்லை என்றால், அதுவரையிலான தாக்குதலை விட 20 மடங்கு அதிக தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்தார்.

அலி லரிஜானி
அலி லரிஜானி

இதற்கு லரிஜானி, 'உங்களுடைய உயிருக்கு ஆபத்து இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்' என்று ட்ரம்பிற்கு பதிலடி கொடுத்திருந்தார்.

அடுத்ததாக, ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகள் தாக்கப்பட்டால், அந்தப் பிராந்தியம் முழுவதும் அரை மணிநேரத்திற்குள் இருளில் தள்ளப்படும் என்று சாடி இருந்தார்.

இப்படி லரிஜானி தொடர்ந்து ட்ரம்பிற்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தார். ஆனால், ட்ரம்போ தனக்கு லரிஜானி யாரென்றே தெரியாது... அவருடைய அச்சுறுத்தல் எல்லாம் ஒரு பொருட்டல்ல என்பது போல டீல் செய்து வந்தார்.

லரிஜானி கொலை

இந்த நிலையில், நேற்று இரவு நடந்த இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் லரிஜானி உயிரிழந்துள்ளார். இதை ஈரான் அரசாங்கமும் உறுதி செய்துள்ளது.

ஈரானை ஆளும் குண்டர் கும்பலான புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தலைவர் என்று லரிஜானியை முன்பு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு குறிப்பிட்டிருந்தார்.

ஈரானின் உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால், அவர் பொதுவெளியில் காணப்படுவதில்லை.

அவருக்குப் பதிலாக இதுவரை லரிஜானி தான் ஈரானின் குரலாக இருந்து வந்தார். மேலும், ஈரானின் உச்ச தலைவர் கொடுக்கும் ஆணைகளை நிறைவேற்றும் நபராகவும் இவர் தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0