'அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா!' - யார் யார்? அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுடன் சந்திப்பு - விவரம் என்ன?

May 25, 2026 - 15:31
0
'அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா!' - யார் யார்? அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுடன் சந்திப்பு - விவரம் என்ன?

அதிமுக இரு பிளவாக பிரிந்திருக்கும் நிலையில், அக்கட்சியை சேர்ந்த மூன்று எம்.எல்.ஏக்கள் சபாநாயகரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்திருக்கின்றனர்.

சி.வி.அணி
சி.வி அணி

தவெகவுக்கு ஆதரவளிக்கும் விவகாரத்தில் அதிமுகவுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அதிமுக எடப்பாடி பழனிசாமி அணி சி.வி.சண்முகம் அணி என இரண்டாக பிரிந்தது. சட்டமன்றத்தில் தவெக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் சி.வி.சண்முகம் ஆதரவாளர்களான 25 எம்.எல்.ஏக்கள் தவெகவுக்கு ஆதரவாகவும் எடப்பாடிக்கு ஆதரவான 22 எம்.எல்.ஏக்கள் தவெக அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தனர்.

இந்நிலையில், இருதரப்பினரும் மாறி மாறி நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தியிருந்தனர். சி.வி.சண்முகம் உட்பட அவரது ஆதரவாளர்களின் கட்சிப் பதவியையும் எடப்பாடி பழனிசாமி பறித்திருந்தார்.

Team CV
Team CV

இந்நிலையில், திடீரென அதிமுகவை சேர்ந்த 3 எம்.எல்.ஏக்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்திருக்கின்றனர்.

மதுராந்தகம் - மரகதம் குமரவேல்,

தாராபுரம் - சத்யபாமா,

பெந்துறை - ஜெயக்குமார் ஆகிய எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்திருக்கின்றனர்.

இவர்கள் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவையும் நேரில் சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User