இரைச்சலுக்கு நடுவே தொலைந்த மெல்லிசை! – உணர்வுப்பூர்வமான பாடல் பகிர்வு

Oct 08, 2026 - 19:30
0
இரைச்சலுக்கு நடுவே தொலைந்த மெல்லிசை! –  உணர்வுப்பூர்வமான பாடல் பகிர்வு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

எண்ணற்ற சிந்தனைகளில் மனம் உழன்று கொண்டிருந்த அதிகாலை நேரம்.

பிரிய அண்ணி சசியிடமிருந்து

ஒரு அலைபேசி அழைப்பு...

'செவ்வந்திப் பூக்களில் செய்தவீடு'... ஆதிரை இந்தப் பாடலை கேட்டு இருக்கீங்களா ?

உங்களுக்கு பிடிக்குமா?

இதைப்பற்றிய உங்களை நினைவுகள்?... அப்படி இப்படின்னு சரமாரியான கேள்விகள் .??

செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு... மெல்ல பேசுங்கள் (1983) பாரதி வாசு இயக்கம்.

சில பாடல்கள் நம் வாழ்க்கையோடவே பிறந்த மாதிரி இருக்கும் எத்தனை வருஷமானாலும் மனசுக்கு ரொம்ப நெருக்கமா.. அப்படிப்பட்ட ஒரு பாடல் இது.

தூங்கிக் கொண்டிருக்கும்காதலனை பாட்டுப் பாடி காதலி எழுப்பதாக அமைந்த இந்தப் பாடல் இடம்பெற்ற திரைப்படம் பானுப்பிரியாவின் முதல் படம். ஜோடி வசந்த்.... (மிக மென்மையான நாயகன்)

'கூவின பூங்குயில் கூவின கோழி குருகுகள் இயம்பின இயம்பின சங்கம் யாவரும் அறிவரியாய் எமக்கெளியாய் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!'

திருவாசகத்தில் உள்ள திருப்பள்ளி எழுச்சியை முதலில் வைத்து பின் மெட்டு சேர்த்து இசை அமைக்க இசைஞானியால் மட்டுமே முடியும்.

(திருப்பள்ளி எழுச்சியில் துவக்கம்

ஆரிராரோ ஆராரிராரிரோ...

தாலாட்டில் முடிவு. )

'நெஞ்சில் நெஞ்சம் ஒன்றாகி

கொஞ்சும் கொஞ்சும்..

நித்தம் நித்தம் தித்திப்பு

முத்தம் முத்தம்...'

கொஞ்சல்... முத்தம் இரண்டும் தித்திப்பு தான் ன்னு சொல்ற புலமைப்பித்தனின் வரிகள். மயிலிறகாய் மனதை வருடும்.

'வானவில்லில்

அமைப்போம் தோரணம்

வண்டு வந்து இசைக்கும்

நாயனம்'...

அந்தி வந்து மலரும் தாமரை

அங்கும் எங்கும்

பொழியும் தேன்மழை'...

உமாரமணனின் குரலில் எத்தனை குதூகலங்கள் இருந்தாலும்

அதற்குள் ஒரு மென் ( ஊசி போலஷார்ப்பா ) சோகம் இழையோடும்.

(அதை உணர்வது வேற லெவல் ஃபீல்)

'காதல் மனம் காண்போம்

எண்ணம்போல் இன்பத்தின் வண்ணங்கள்' ன்னு பாடி ஆஆஆஆன்னு தீபன் சக்கரவர்த்தி ...ஆலாபனை செயயறப்ப

அப்பப்பா... உள்ளம் கொள்ளைப் போகும்.

'தாழம் பூவில்

கல்யாண ஓலை தந்து

தங்கத் தேரில் ஊர்வலம்

நாளை வந்து...'இப்படி

தூங்கிக் கொண்டிருந்த

நாயகனை எழுப்பி

தன்கனவின் ஏக்கத்தை(மனசுக்குள் புகுந்து) பாடும்உமா ரமணன்

ஆரிராரோ ஆராரிராரோ..

.ஆரிராரோ ஆராரிராரோ...

ஆரிராரோ ஆராரிராரோ.. ன்னு முடிப்பார்

இருவரும் சேர்ந்து பாடி உறங்குவர்

இந்த மாதிரி ஒரு பாடலை

இனி மேலும்

யாராவது

இசையமைக்கமுடியுமா?

பாடல் முழுதும் மென்மையா மிருதங்கம் தபேலா ...இசைஞானிக்கே உரித்தான புல்லாங்குழல்...

ஆங்காங்கே வயலினும், மிருதங்கமும் பேசிக்கொள்ளும் ...அது தனிஅழகு.

படத் தலைப்பைப் போலவே...

மெல்ல மெல்ல கைகளில் ஏந்திக் கொள்ளும்....

இப்படிப்பட்ட பாடல்களை தொலைத்துவிட்டு

இரைச்சலில் நசுங்கி கிடக்கிறது

இந்த தலைமுறை.

வயதானாலும்

பருவங்கள் மாறினாலும்

இப்படிப்பட்ட பாடல் மீது

கொண்ட காதல்

உயிர்ப்போடு இருந்தால்...

இந்த பிரபஞ்சமே நம்மை

அரவணைத்துக் கொள்ளும்.

என்றென்றும் அன்புடன்,

ஆதிரை வேணுகோபால்.

பி.கு(நன்றி சசி அண்ணி பள்ளி நாட்களை நினைவு படுத்தியதற்கு)

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..!

இந்த வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப்பில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User