அடுத்தடுத்து பண்டிகை சீசன்; தங்க நகை வாங்க பிளான் இருக்கிறதா? 'இதை' நோட் செய்து வாங்கினால் லாபம்!

Aug 21, 2026 - 18:31
0
அடுத்தடுத்து பண்டிகை சீசன்; தங்க நகை வாங்க பிளான் இருக்கிறதா? 'இதை' நோட் செய்து வாங்கினால் லாபம்!

இன்று ஒரே நாளில் காலை, மதியம் என தங்கம் விலை சென்னையில் கிராமுக்கு ரூ.250-உம், பவுனுக்கு ரூ.2,000-உம் உயர்ந்துள்ளது.

தற்போது சென்னையில் தங்கம் விற்பனையாகி வரும் விலை - கிராமுக்கு ரூ.14,850, பவுனுக்கு ரூ.1,18,800.

இந்தியாவில் அடுத்தடுத்துப் பண்டிகை சீசன். இந்தியக் குடும்பங்களில் கேட்கவா வேண்டும். நம் மக்கள் இந்த சீசனில் தங்கம் வாங்க அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். தங்கம் வாங்கும்போதும் செய்கூலி, சேதாரம் என்று ஒரு தொகை போய்விடும்.

கல் தங்க நகை
கல் தங்க நகை

விற்கும்போதும், தேய்மானம் என்று ஒரு தொகை போய்விடும். இதை எப்படியிருந்தாலும் தவிர்க்க முடியாது.

அதனால், தங்க நகை வாங்கும்போது, கொஞ்சம் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டால், தேய்மானத்திற்குப் போகும் தொகையைக் கொஞ்சம் மிச்சம் பிடிக்கலாம்.

அந்தப் புத்திசாலித்தனம் என்ன?

முடிந்தளவு கல் வைத்த நகையை வாங்காதீர்கள். இது பார்க்க அழகாக இருக்குமே தவிர, ஆத்திர அவசரத்தில் உதவாது. நம் வீடுகளில் நகை வாங்குவது அதைப் போட்டு அழகு பார்ப்பதற்கு மட்டுமல்ல.

நெருக்கடி நேரங்களில், அவற்றை அடமானம் வைத்துப் பணம் வாங்குவதற்கும்தான். கல் நகைகளை அடமானம் வைக்கும்போது, கற்கள் போக, தங்கத்தின் மதிப்பில் மூன்றில் ஒரு பங்குதான் கடனாக வழங்கப்படும். இதனால், நீங்கள் நினைத்த அளவு தொகை உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம்.

இந்தச் சிக்கலில் எல்லாம் சிக்காமல் இருக்க, கல் இல்லாமலே, வேலைப்பாடுகள் உள்ள நகைகளைத் தேர்வு செய்யலாம்.

கல் வைத்து நகை வாங்க வேண்டும் என்கிற ஆசை இருந்தால், மோதிரம், கம்மல் ஆகியவற்றை வாங்குங்கள். இதனால், பெரியளவில் நஷ்டம் ஏற்படாது. ஏனெனில், அதன் எடை குறைவு.

தங்க நகை
தங்க நகை

இதனால், அதிகம் எடையுள்ள கல் வைத்த ஆரம், நெக்லேஸ், வளையலைத் தவிர்த்துவிடுங்கள்.

இந்த டிரிக்குகளைத் தங்க நகையை ஆபரணமாகவும் பயன்படுத்துவேன்... அவசரத்திற்கும் பயன்படுத்துவேன் என்பவர்களுக்குத்தான். தங்க நகையை முழுக்க முழுக்க அணிகலனாக மட்டுமே பயன்படுத்துவேன் என்பவர்கள் இந்த டிப்ஸ்களைத் தவிர்த்துவிடலாம்.

இதை எல்லாவற்றையும் விட, கூடுதல் டிப் ஒன்று: தேவை இருந்தால் மட்டுமே தங்க நகையை வாங்குங்கள். இல்லையென்றால், அந்தத் தொகையை கோல்டு இ.டி.எஃப்பில் போட்டு வையுங்கள்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User