மீண்டும் பெட்ரோல், டீசல் விலை 90 பைசா ஏற்றம்; சென்னையில் எவ்வளவு? 3 நாள்களில் இரண்டு முறை ஏற்றம்!

May 19, 2026 - 11:01
0
மீண்டும் பெட்ரோல், டீசல் விலை 90 பைசா ஏற்றம்; சென்னையில் எவ்வளவு? 3 நாள்களில் இரண்டு முறை ஏற்றம்!

ஈரான் போர் தொடங்கி 2 மாதங்கள் 21 நாள்கள் ஆகின்றன.

அமெரிக்கா, ஈரான் தாக்குதல் தற்காலிகமாக தான் நிறுத்தப்பட்டுள்ளதே தவிர, முழுமையாக முடிவுக்கு வரவில்லை. ஹார்முஸ் ஜலசந்தியை இன்னும் மூடியே வைத்திருக்கிறது ஈரான்.

இதனால், கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் வந்து செல்வதிலும் பிரச்னை நீடித்துக்கொண்டே வருகிறது.

ஈரான் போர் தொடங்கிய உடன் கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் ஏறினாலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கிட்டத்தட்ட 2 மாதங்களாக ஏற்றப்படவில்லை.

கேஸ் சிலிண்டர்களின் விலை மட்டுமே ஏற்றப்பட்டது.

பெட்ரோல், டீசல்
பெட்ரோல், டீசல்

ஆனால், ஈரான் போருக்கு ஒரு 'எண்ட் கார்டு' வராததால், கடந்த வெள்ளிக்கிழமை (மே 15), 3 ரூபாயை பெட்ரோல், டீசல் விலையில் உயர்த்தியது இந்திய எண்ணெய் நிறுவனங்கள்.

தற்போது மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளது எண்ணெய் நிறுவனங்கள். அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல், டீசலுக்கு கிட்டத்தட்ட 90 பைசா உயர்த்தப்பட்டுள்ளது.

மூன்று நாள்களுக்குள் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது தற்போது பேசுபொருளாகியுள்ளது.

இன்றைய விலைப்படி,

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.104.49 (82 பைசா விலை ஏற்றம்) ஆகவும், ஒரு லிட்டர் டீசல் ரூ.96.11 (86 பைசா விலை ஏற்றம்) ஆகவும் விற்பனை ஆகி வருகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User