7-ம் வகுப்பு மாணவனிடம் பாலியல் சீண்டல் - மதபாடசாலை ஆசிரியர் போக்சோவில் கைது!

Oct 06, 2026 - 12:30
0
7-ம் வகுப்பு மாணவனிடம் பாலியல் சீண்டல் - மதபாடசாலை ஆசிரியர் போக்சோவில் கைது!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள பாலப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த 12 வயதான சிறுவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் அப்பகுதியில் உள்ள சபையில் மத பாடசாலைக்குச் சென்று படித்து வருகிறார். சேந்திநகரை சேர்ந்த ரோஸ்லின் வேதக்கண்(55) என்பவர் மாணவர்களுக்கு மத பாடங்களைச் சொல்லி கொடுக்கும் பணி செய்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த மாணவர் சில வாரங்களாக வகுப்பிற்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

இதனை அறிந்த தந்தை மகனிடம் சபை வகுப்பிற்கு செல்லாதது பற்றி கேட்டுள்ளார். அப்போது மாணவன் கூறிய விஷயத்தை கேட்டு தந்தை அதிர்ச்சி அடைந்தார். கடந்த மாதம் 20-ம் தேதி வழக்கம்போல் சபை வகுப்பிற்குச் சென்ற மாணவன் டெஸ்க்கில் கையை வைத்து அமர்ந்திருந்தபோது சபை ஆசிரியர் திடீரென டெஸ்க்கின் பக்கவாட்டு பகுதி வழியாக மாணவனிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். உடனே அங்கிருந்து வெளியே வந்ததாகவும் அதனால்தான் சபைக்கு செல்லாமல் இருப்பதாக கூறினான். இதுகுறித்து மாணவனின் தந்தை குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைதுசெய்யப்பட்ட வேதக்கண்

புகார் குறித்து இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அந்தோணியம்மாள் உத்தரவின்பேரில் எஸ்.ஐ. மீனாகுமாரி விசாரணை நடத்தினார். அதில் மாணவருக்கு சபை ஆசிரியர் தொல்லை கொடுத்து ஓரினச் சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தியது தெரியவந்துள்ளது. இதையடுத்து சபை ஆசிரியர் ரோஸ்லின் வேதக்கண் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவரை கைது செய்தனர்.!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User