புனேயில் கள்ளச்சாராயம் குடித்த 15 பேர் பலி! மகாராஷ்டிரா வில் அதிர்ச்சி
மகாராஷ்டிரா மாநிலம் புனே மற்றும் சிஞ்ச்வாட் பகுதியில் நேற்று முன்தினம் முதல் கள்ளச்சாராயம் குடித்த பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வந்தனர். நேற்று முன்தினம் கள்ளச்சாராயத்தால் 8 பேர் உயிரிழந்தனர். நேற்று மேலும் 7 பேர் சிகிச்சை பலனலிக்காமல் இறந்து போனார்கள். புனேவின் ஹடாப்சர் பகுதியில் ஐந்து நபர்களும், பிம்ப்ரி-சிஞ்ச்வாட்டின் புகேவாடியில் பத்து பேரும் இறந்ததாக போலீஸார் தெரிவித்தனர். மேலும் பலர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். கள்ளச்சாராயம் விற்றது தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அளித்த பேட்டியில்,''இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம். இது தொடர்பாக எட்டு பேர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் சிலரும் கைது செய்யப்படலாம். இதன் பின்னணி குறித்து விசாரித்து வருகிறோம். இது எவ்வாறு நடந்தது என்பது குறித்து . காவல்துறை கலால் துறையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இதன் பின்னணியில் இருக்கும் நபரை கண்டறிந்து அவர்களை முழுமையாக கைது செய்வோம். இது மெத்தனால் போன்ற ஒரு பொருளைப் பயன்படுத்தி கள்ளச்சாராயம் தயாரிக்கப்பட்டுள்ளது," என்று அவர் கூறினார்.
மாநில கலால் ஆணையர் அதுல் கனாடே இது குறித்து கூறுகையில், "புகேவாடி மற்றும் ஹடாப்சர் ஆகிய இரு பகுதிக்கும் மதுபானம் சப்ளை செய்த யோகேஷ் வான்கடேயை நாங்கள் கைது செய்தோம். அவர் பிம்ப்ரி சின்ச்வாட் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்'' என்று கூறினார். மேலும் பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)