நடிகர் சபேஷ் கார்த்திக் திடீர் மரணம் - தேவா குடும்பத்தை துரத்தும் சோகம்

Oct 20, 2026 - 12:30
0
நடிகர் சபேஷ் கார்த்திக் திடீர் மரணம் - தேவா குடும்பத்தை துரத்தும் சோகம்

மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் மகன் சபேஷ் கார்த்திக் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 37.

கடந்த வாரம் மறைந்த தேவாவின் சகோதரும் கடந்தாண்டு இதே அக்டோபர் மாதம் மறைந்தவருமான இசையமைப்பாளர் சபேஷின் மகன் கார்த்திக் துணை, கதாபாத்திரத்தில் பல படங்களில் நடித்து வந்தார்.

பட்டத்து யாணை, தம், வல்லவன், பர்மா, குளிர் 100 உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். நகைச்சுவையில் கவனிக்கத்தக்க நடிகராக வலம் வருவார் எனப் பெரிய எதிர்பார்ப்பை உண்டு பண்ணியிருந்தார்.

இசையமைப்பாளர் தேவா

இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே இவருக்கு உடல் நலனில் பிரச்னை ஏற்பட்டதாக கூறுகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போதும் பிரச்னை சரியாகவில்லை என்கிறார்கள்.

இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி கார்த்திக்கின் உயிர் பிரிந்தது.

கார்த்திக்குக்கு ரம்யா என்ற மனைவியும் பிரிஷாணிதாரா, ஹைராணிதாரா என இரு மகள்களும் இருக்கிறார்கள்.

கார்த்திக்கின் உடலடக்கம் இன்று மாலை நடக்கிறது. கார்த்திக்கின் மறைவுக்கு தமிழ் திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தேவா மறைந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் இன்னொரு மரணம் தேவாவின் குடும்பத்தினர் மத்தியில் பெரிய சோகத்தை உருவாக்கியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User