திருச்சி: பட்டாசு வெடிப்பதில் மோதல்; ஐ.டி ஊழியர் ஸ்பேனரால் குத்திக் கொலை!

Nov 09, 2026 - 13:30
0
திருச்சி: பட்டாசு வெடிப்பதில் மோதல்; ஐ.டி ஊழியர் ஸ்பேனரால் குத்திக் கொலை!

திருச்சி மாவட்டம், ​புறத்தாக்குடி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சேவியர் லாரன்ஸ். இவரது மகன் கிறிஸ்டோபர் (வயது: 20). சென்னையில் உள்ள தனியார் ஒரு ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், தீபாவளி விடுமுறைக்காகச் சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில், கிறிஸ்டோபர் தனது நண்பர்களான ரஞ்சித் (வயது: 26) மற்றும் லெனின் (வயது: 21) ஆகியோருடன் இணைந்து புறத்தாக்குடி நடுத்தெருவில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த மேலத் தெருவைச் சேர்ந்த டொனால்ட், எடிசன் மற்றும் சார்லஸ் ஆகிய மூவரும், 'எங்கள் மீது படும்படி ஏன் பட்டாசு வெடிக்கிறீர்கள்?' என்று கேட்டுத் தகராறில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றியதில் இரு தரப்பினருக்கும் இடையே பலத்த மோதல் உருவானது. இதில், ஆத்திரமடைந்த டொனால்ட், அருகிலிருந்த இரும்பு ஸ்பேனரை எடுத்து கிறிஸ்டோபரின் நெஞ்சின் இடது பக்கத்திலும், ரஞ்சித்தின் முகத்திலும் சரமாரியாகக் குத்தியுள்ளார். ​இச்சம்பவத்தில் படுகாயமடைந்த கிறிஸ்டோபர் மற்றும் ரஞ்சித் ஆகிய இருவரையும் மீட்டு, சமயபுரத்தில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர்.

trichy

அங்கு கிறிஸ்டோபரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது இதயப் பகுதியில் பலத்த காயம்பட்டதால் அவர் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். முகத்தில் காயமடைந்த ரஞ்சித்திற்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ​தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சமயபுரம் காவல் நிலையப் போலீஸார், கிறிஸ்டோபரின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காகத் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் போலீஸார், தலைமறைவாக உள்ள டொனால்ட், எடிசன் மற்றும் சார்லஸ் ஆகிய மூவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டாசு வெடிப்பதை ஏற்பட்ட தகராறில் ஐ.டி நிறுவன ஊழியர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User