`கர்ப்பமாக்கிவிட்டு கொலை மிரட்டல்’ - அரக்கோணம் தவெக ஒன்றியச் செயலாளர் மீது பெண் பகீர் புகார்!

Oct 20, 2026 - 13:31
0
`கர்ப்பமாக்கிவிட்டு கொலை மிரட்டல்’ - அரக்கோணம் தவெக ஒன்றியச் செயலாளர் மீது பெண் பகீர் புகார்!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகேயுள்ள வடமாம்பாக்கம் மங்கம்மாபேட்டையைச் சேர்ந்த 38 வயதான பெண் ஒருவர், அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார்.

மனுவில் அவர், ``எனக்குத் திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. 2 மகள்கள் உள்ளனர். எனது கணவர் ஓட்டுநராக வேலைச் செய்கிறார். நான் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் உறுப்பினராக உள்ளேன். இந்த நிலையில், எனக்கும் த.வெ.க-வின் அரக்கோணம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் சசிகுமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

புகாரளித்த பெண்

கடந்த மே மாதம் 16-ம் தேதி, `கட்சிப் பணிகள் குறித்து பேச வேண்டும்’ எனக் கூறி என்னுடைய வீட்டுக்கு சசிகுமார் வந்தார். அப்போது, `நான் சொல்றதை கேளு. என்கிட்ட அனுசரிச்சு போகலைனா, உன் குடும்பத்தையே கொன்னுடுவேன். என்னோட ஆசைக்கு இணங்கினா கட்சியில உனக்கு நல்ல பதவி வாங்கி தரேன்’ என்று கட்டாயப்படுத்தி, பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டார்.

இதேபோல், பலமுறை என்னை மிரட்டி பாலியல் உறவில் ஈடுபட்டார். இதனால், நான் கர்ப்பமானேன். இது குறித்து சசிகுமாரிடம் தெரிவித்தபோது, அவர் என்னை மிரட்டினார். பயத்தில் எனக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. எனவே, சசிகுமார் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த புகாரின் உண்மைத்தன்மை குறித்து, மகளிர் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User