ஏழை பெண்களிடம் ரூ.25000 கொடுத்து கருமுட்டை எடுக்கும் கும்பல்; வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை

Oct 17, 2026 - 12:00
0
ஏழை பெண்களிடம் ரூ.25000 கொடுத்து கருமுட்டை எடுக்கும் கும்பல்; வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை

மகாராஷ்டிரா பத்லாப்பூர் பகுதியில் பெண்களிடம் சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்து விற்பனை செய்யப்படுவதாக அமலாக்கப்பிரிவுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சட்டவிரோதமாக கருமுட்டையை எடுக்கும் பத்லாபூர் கிளினிக்கில் ரெய்டு நடத்தினர். இதில் டாக்டர் சுலக்சனா உட்பட 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் ஏழைப் பெண்களை கருமுட்டை தானம் செய்தால் பணம் கிடைக்கும் என்று கூறி அழைத்து வருவது, குழந்தை இல்லாத தம்பதியைத் தேடுவது போன்ற வேலைகளில் ஈடுபட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், இதுவரை 40க்கும் மேற்பட்ட பெண்களிடம் இது போன்று கருமுட்டையை எடுத்து இருப்பது தெரியவந்துள்ளது. ஒவ்வொரு முறையும் கருமுட்டையை எடுக்க பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை பணம் கொடுத்துள்ளனர்.

அதோடு வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே கருமுட்டையை பெண்களிடமிருந்து எடுக்க முடியும் என்ற நிலை இருக்கும்போது இக்கும்பல் ஒவ்வொரு பெண்ணிடம் பல முறை இது போன்று கருமுட்டையை எடுத்துள்ளனர். ஒரு பெண்ணிடம் 33 முறை கருமுட்டையை எடுத்துள்ளனர்.

டாக்டர் சுலக்சனா இதனை தனது வீட்டையே கிளினிக்காக மாற்றி அங்கேயே இந்த மோசடியைச் செய்துள்ளார். அதோடு கருமுறையை விரைவில் வெளியேற்ற தேவையான ஊசி மற்றும் மருந்துகளைச் சரியான முறையில் சேமித்து வைக்கப்படாமல் இருந்தது. சட்டவிரோதமாக சோனோகிராபி எடுத்தல், பாதுகாப்பற்ற முறையில் செயற்கை கருத்தரித்தல் முறையை மேற்கொள்ளுதல் போன்றவையும் நடந்தது தெரிய வந்துள்ளது.

இந்த மோசடியில் தொடர்புடைய ஏஜெண்டுகள், டாக்டர்கள் மற்றும் கிளினிக்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு பெண்களைத் தேடி கண்டுபிடிப்பதில் கிளினிக்களுக்கு எந்த அளவுக்குத் தொடர்பு இருக்கிறது என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User