ஈரோடு: பள்ளி மாணவர்களைக் குறிவைத்து போதை மாத்திரை விற்பனையா? 420 மாத்திரைகள் பறிமுதல்; 6 பேர் கைது
ஈரோடு மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதை மாத்திரை புழக்கம் அதிகரித்து வரும் நிலையில், குறிப்பிட்ட சில பகுதிகளில் விற்பனை நடைபெறுவதாக மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் ஈரோடு வடக்கு மற்றும் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வில்லரசம்பட்டி, மரப்பாலம் போன்ற பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து மற்றும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்த நபர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். முதற்கட்டமாக அப்பகுதிகளில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட முக்கிய நபர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து விற்பனைக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான போதை மாத்திரைகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

பின்னணி குறித்து தெரிவித்த காவல்துறையினர் , "ஈரோட்டடின் பல பகுதிகளைச் சேர்ந்த தருண், ரிஷாந்த், துரைசாமி, பிரித்விராஜன், ராகவன், அப்துல் சமது ஆகிய 6 பேரிடம் இருந்து மொத்தம் 420 போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்தோம். இவர்கள் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள்.
மருத்துவ பயன்பாடுகளுக்கான இந்த மாத்திரைகள் மருத்துவரின் பரிந்துச்சீட்டு இல்லாமல் எங்கிருந்து கடத்தி வரப்பட்டன? பள்ளி, கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து இவை விற்கப்படுகிறதா? இந்த நெட்வொர்க்கில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்பன குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)