"10 நாள்களுக்கு முன்பு தான் சிரித்த முகத்தோடு.." - குஷ்பு | இசையமைப்பாளர் தேவாவிற்கு இரங்கல் | Live Blog
நடிகை குஷ்பு
"முற்றிலும் மனமுடைந்து போனேன். நம்பவே முடியவில்லை. 10 நாள்களுக்கு முன்பு தான் ஆரோக்கியமாகவும், சிரித்த முகத்தோடும் வாழ்த்திய ஒருவர், அதற்குள் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் என்பதை நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது.
'தேனிசைத் தென்றல்' என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் அவர், தேனைப் போன்ற இனிய குணமும், தென்றலைப் போன்ற மென்மையான மனமும் கொண்ட மனிதர். இசை உலகிற்கும் சினிமாத்துறைக்கும் அவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது.
இவ்வளவு சீக்கிரம் எங்களை விட்டுச் சென்றுவிட்டீர்களே... ஏன்??
உங்களை மிகவும் இழந்து தவிக்கிறோம் தேவா சார். உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்".
Absolutely devastated. Unbelievable. A man who was healthy and laughing, blessing and was part of us just 10 days ago is gone. Its heartbreaking. Thenisai Thendral as he was known, was indeed a man as sweet as honey and light hearted as the wind. His contribution to the world of music and cinema is beyond. Gone too soon. Why?? You will be missed Deva Sir. Rest in peace. #Deva #thenisaithendral #OmShanti
— KhushbuSundar (@khushsundar) October 17, 2026
தமிழ்நாடு ஆளுநர் அர்லேகர்
பிரபல இசையமைப்பாளர் தேவா அவர்களின் மறைவுக்கு தமிழ்நாடு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
தனது இனிமையான இசையமைப்பாலும், மறக்க முடியாத பாடல்களாலும் தமிழ்த் திரையிசை உலகில் தனித்துவமான இடத்தைப் பெற்ற தேவா அவர்களின் மறைவு, தமிழ்த் திரையுலகிற்கும் இசை உலகிற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
அன்னாரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், திரையுலகினர் மற்றும் இசை ரசிகர்கள் அனைவருக்கும் ஆளுநர் அவர்கள் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறார். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறார்.
பிரபல இசையமைப்பாளர் தேவா அவர்களின் மறைவுக்கு தமிழ்நாடு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். தனது இனிமையான இசையமைப்பாலும், மறக்க முடியாத பாடல்களாலும் தமிழ் திரையிசை உலகில் தனித்துவமான இடத்தைப் பெற்ற தேவா அவர்களின் மறைவு, தமிழ் திரையுலகிற்கும் இசை உலகிற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அன்னாரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், திரையுலகினர் மற்றும் இசை ரசிகர்கள் அனைவருக்கும் ஆளுநர் அவர்கள் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறார். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறார். #இசையமைப்பாளர்_தேவா #தேவா #ஆழ்ந்த_இரங்கல்
— LOK BHAVAN, TAMIL NADU (@lokbhavan_tn) October 17, 2026
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)