“ஆணாதிக்க சிந்தனை... 'டோரதி' படத்தை ஏற்க முடியாமல் கடுமையாக விமர்சிக்கிறார்கள்” - திருமா

Oct 20, 2026 - 08:02
0
“ஆணாதிக்க சிந்தனை... 'டோரதி' படத்தை ஏற்க முடியாமல் கடுமையாக விமர்சிக்கிறார்கள்” - திருமா

'டோரதி' படத்தைப் பார்த்த விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்திருக்கிறார்.

படம் குறித்து பேசிய அவர், "இன்றைக்கும் ஆணாதிக்க சிந்தனை உள்ளவர்கள் 'டோரதி' திரைப்படத்தை ஏற்க முடியாமல் கடுமையாக விமர்சிக்கிறார்கள்..

மூன்றாம் பாலினத்தவர்களை இந்தச் சமூகம் அருவருப்பாகப் பார்க்கிறது. இழிவாகப் பார்க்கிறது.

டோரதி
டோரதி

அதனால் அவர்கள் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அல்லது பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுகிறார்கள் என்பதை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் இந்தப் படத்தில் பேசியிருக்கிறார்.

கடுமையாகச் சாடியிருக்கிறார். மூன்றாம் பாலினத்தவர்கள் படும் கஷ்டங்களை டோரதி திரைப்படத்தில் துணிச்சலாக சொல்லியிருக்கிறார்.

சாதி, மதம், இனம் கடந்து ஆண்களிடையே ஒரு ஒற்றுமை நிலவுகிறது என்றால் அது பாலினப் பாகுபாடு தான் என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார். எத்தனையோ திரைப்படங்களைப் பார்த்திருக்கிறோம். அதில் திருநங்கைகளை அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாகக் காட்டியிருப்பார்கள்.

விசிக தலைவர் திருமாவளவன்
விசிக தலைவர் திருமாவளவன்

ஆனால் ஒரு முழு நீளத் திரைப்படமான 'டோரதி' பிரச்னையை பேசுகிறது. திருநங்கைகள் சந்திக்கும் இடர்கள், இன்னல்கள், வலிகள் ஆகியவற்றை இந்தத் திரைப்படம் மிகவும் ஆழமாகச் சொல்லியிருக்கிறது" என்று 'டோரதி' படம் குறித்து திருமா பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User