'மக்கள் சமூக அந்தஸ்துக்காக பொன்னி அரிசி சாப்பிடுகிறார்கள்!' - அமைச்சர் வெங்கட்ரமணன் சர்ச்சை

Oct 16, 2026 - 13:00
0
'மக்கள் சமூக அந்தஸ்துக்காக பொன்னி அரிசி சாப்பிடுகிறார்கள்!' - அமைச்சர் வெங்கட்ரமணன் சர்ச்சை

தமிழகத்தில் விலைவாசி உச்சத்தை தொட்டிருக்கிறது. குறிப்பாக, அரிசியின் விலை எக்கச்சக்கமாக உயர்ந்திருப்பதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அரிசி விலை உயர்வு பற்றி பேசிய அமைச்சர் வெங்கட்ரமணன் 'நகர்ப்புற மக்கள் சமூக அந்தஸ்துக்காக பொன்னி அரிசி சாப்பிடுகின்றனர்' எனப் பேசியிருப்பது சர்ச்சையாகியிருக்கிறது.

வெங்கட்ரமணன்
வெங்கட்ரமணன்

நேற்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர் வெங்கட்ரமணன் பேசியதாவது, 'சில கட்சிகளின் பிரமுகர்கள் அரிசியை பதுக்கி வைத்து விற்பதும் விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணம். விலைவாசி உயர்வில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது என்பதை கடந்த 5 ஆண்டுகால புள்ளிவிவரங்களோடும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். கிராமப்புறங்களில் 90% மக்கள் ரேஷன் அரசியை வாங்கிதான் பயன்படுத்துகிறார்கள். நகர்ப்புறங்களில்தான் விலைவாசி உயர்வு தெரிகிறது.

நகர்ப்புறங்களில் கர்நாடக பொன்னி ஆந்திர பொன்னி அரிசி சாப்பிடுகிறார்கள். சமூக அந்தஸ்துக்காக சில வகை அரிசிகளை சாப்பிடுகிறார்கள். அந்த அரிசிகளின் வரத்து குறைவாக இருப்பதால் விலைவாசி உயர்ந்திருப்பதைப் போல தெரிகிறது. தமிழகத்திலேயே விளையும் அரிசிகளின் விலை இயல்பாகத்தான் இருக்கிறது. பதுக்கல்களை தடுப்பதற்காக மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. பாமாயில் விநியோகம் முறையாக நடந்துகொண்டுதான் இருக்கிறது' என்றார்.

அமைச்சர் வெங்கட்ரமணன்
அமைச்சர் வெங்கட்ரமணன்

இந்நிலையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர், 'நகர்ப்புற மக்களின் பழக்கவழக்கங்களை குறித்துதான் சமூக அந்தஸ்து எனக் குறிப்பிட்டேன். நான் பிறந்ததிலிருந்தே ரேஷன் அரிசிதான் சாப்பிடுகிறேன். 'நீங்கள் ரேஷன் அரிசிதான் சாப்பிடுகிறீர்கள் எனில் கடந்த ஆட்சியிலும் ரேஷன் அரிசி நன்றாகத்தானே போட்டிருக்கிறார்கள்...' என நிருபர் கேட்க, 'அது என்னுடைய தனிப்பட்ட விருப்பம்' என்றார். 'உங்களுக்கு எப்படி அரிசி கார்டு கிடைத்தது..' எனக் கேட்க, 'அமைச்சராகும் முன்பு வரை நான் அரிசி கார்டைத்தான் பயன்படுத்திக் கொண்டிருந்தேன்' என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User