ஊத்தங்கரை எம்.எல்.ஏ நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்ட தவெக நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு!

Oct 16, 2026 - 08:30
0
ஊத்தங்கரை எம்.எல்.ஏ நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்ட தவெக நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரைத் தொகுதியில் நலத்திட்டங்களை தொடங்கி வைக்க வரும் பொறுப்பு அமைச்சர் கீர்த்தனாவின் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் குறித்து ஊத்தங்கரையிலுள்ள தவெக எம்.எல்.ஏ இளையராஜா வீட்டில் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. .

ஊத்தங்கரை த.வெ.க எம்.எல்.ஏ இளையராஜா
ஊத்தங்கரை த.வெ.க எம்.எல்.ஏ இளையராஜா

இக்கூட்டம் முடிந்து இரவு 8 மணிக்கு டூவீலரில் தன் வீட்டுக்கு கிளம்பிய இளையராஜாவின் நெருங்கிய நண்பரும், தவெக நிர்வாகியுமான ஆத்திமை பின் தொடர்ந்து வந்த கார் டூவீலர் மீது மோத, கீழே விழுந்த ஆத்திமை காருக்குள்ளிருந்து இறங்கிய நபர் அரிவாளால் வெட்டியுள்ளார். கையால் தடுத்தபடி ஆத்திமின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும், தவெக-வினரும் விரைந்து வர, காரில் வந்த கும்பல் உடனே தப்பித்து சென்றுள்ளது.

ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆத்திமை ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதல் உதவி சிகிச்சை அளித்துவிட்டு பின்பு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்து எம்.எல்.ஏ இளையராஜா மருத்துவமனைக்கு வந்து ஆத்திமை பார்த்தார்.

இந்த தாக்குதலில் ஈடுபட்ட கும்பலை போலீசார் தேடி வரும் நிலையில் போச்சம்பள்ளி அருகே பெட்ரோல் பங்கை ஒட்டிய நிலத்தில் கத்தி, அரிவாள்கள், கையுறை, ஜெர்கின், ஹெல்மெட் உள்ளிட்ட பொருட்கள் கிடந்ததை பொதுமக்கள் பார்த்து தகவல் சொல்ல, போலீசார் அவைகளை கைப்பற்றி, இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டதா என்றும் விசாரித்து வருகின்றனர்.

ஆத்திம்

தவெக எம்.எல்.ஏ-க்களிடம் திமுகவினர் குதிரைப் பேரம் நடத்தியதாக சொல்லப்பட்ட விவகாரத்தில் தன்னிடம் ஒரு கும்பல் பேரம் நடத்தியதாக புகார் கூறியவர் இளையராஜா. அப்புகாரில் சிலர் கைது செய்யப்பட்டு அந்த வழக்கு நடந்து வருகிறது.

இந்த நிலையில் இளையராஜாவுக்கு நெருக்கமானவராக சொல்லப்படும் ஆத்திம் கொலை முயற்சிக்கு உள்ளானதன் பின்னணியில் யார் சம்பந்தப்பட்டுள்ளார்கள்? உட்கட்சி பிரச்சனையா? எம்.எல்.ஏ இளையராஜாவை மிரட்டவா? அல்லது டிராவல்ஸ் நடத்தி வரும் ஆத்திமின் தொழில் எதிரிகள் நடத்திய தாக்குதாலா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்ட தவெக-வில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User