ஜம்மு காஷ்மீர்: CISF வீரர்களிடையே வாக்குவாதம்; 4 வீரர்களைச் சுட்டுக்கொன்ற தலைமைக் காவலர்

Sep 30, 2026 - 11:00
0
ஜம்மு காஷ்மீர்: CISF வீரர்களிடையே வாக்குவாதம்; 4 வீரர்களைச் சுட்டுக்கொன்ற தலைமைக் காவலர்

ஜம்மு காஷ்மீரில் உள்ள கத்துவா மாவட்டத்தில், மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (CISF) வீரர் ஒருவர் சக வீரர்களைச் சுட்டுக்கொன்றுள்ளார்.

என்ன நடந்தது?

ஜம்மு காஷ்மீரில் ஓடும் ரவி நதியின் கிளை ஆறு சேவா நதி. இதன் குறுக்கே நீர்மின் நிலையம் ஒன்று அமைந்துள்ளது.

அந்தப் பகுதியில் சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்திருக்கின்றனர்.

அப்போது சக வீரர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்கள்
துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்கள்

இதில் ஆத்திரமடைந்த தலைமைக் காவலர் அவதேஷ் குமார் சிங் அவரது ஏகே-47 துப்பாக்கியால் தனது சகாக்களைச் சுட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று (செப்டம்பர் 29) மாலை 6.40 மணியளவில் நடந்துள்ளது.

இதில் உதவி கமாண்டன்ட் அங்கித் குமார் பாண்டே, சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமண் சிங், காவலர் ரஃபீக் அகமது மற்றும் காவலர் சந்தீப் குமார் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

பறிமுதல்... கைது

அவதேஷ் குமார் சிங்கிடம் 150 தோட்டாக்கள் இருந்திருக்கின்றன என்று சி.ஐ.எஸ்.எஃப் தெரிவித்துள்ளது. இப்போது அவரது தோட்டாக்கள் மற்றும் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அவதேஷ் குமாரைக் கைது செய்துள்ளது காவல்துறை. வீரர்களுக்கு இடையே எதனால் வாக்குவாதம் ஏற்பட்டது, என்ன நடந்தது ஆகியவற்றைப் பற்றித் தற்போது விசாரணை நடந்து வருகிறது.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நான்கு வீரர்களும் முதலில் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள NHPC மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். ஆனால், சிகிச்சைக்குப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User