"2 நாள்களில் 9 கொலைகள்; முதல்வர் 'மிக்சர்' சாப்பிடாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும்" - உதயநிதி

Sep 29, 2026 - 15:30
0
"2 நாள்களில் 9 கொலைகள்; முதல்வர் 'மிக்சர்' சாப்பிடாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும்" - உதயநிதி

தமிழகத்தில் தொடர்ந்து கொலைகள் அரங்கேறி வருகின்றன. சட்டம் ஒழுங்கு குறித்து தொடர்ந்து எதிர்க்கட்சிகளும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றன.

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "திருநெல்வேலியில் டால்டன் மற்றும் நிக்கோலஸ் என அண்ணன் தம்பி பட்டப்பகலில் குத்திக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

க்ரைம்
க்ரைம்

இதே போல, சென்னை ஐஸ் ஹவுஸில் கஞ்சா விற்பதில் ஏற்பட்ட போட்டியில் அஜித் என்னும் இளைஞரை ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ள கொடூரமும் அரங்கேறியுள்ளது.

குற்றத்தைத் தடுக்க வேண்டிய காவலர்களுக்கும் இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்பதற்கு சாட்சியாக, பரமக்குடியில் பெண் காவலர் கண்ணகி, கீழே தள்ளிவிடப்பட்டு உயிரிழந்து இருக்கிறார்.

இது தவிர, மயிலாடுதுறை - திருவண்ணாமலை - சேலம் - கன்னியாகுமரி - தேனி கூடலூர் எனக் கடந்த 2 நாட்களில் மட்டும் 9 கொலைகள் நடந்து இருக்கின்றன.

இப்படிக் கொத்துக்கொத்தாகக் கொலைகள் நடந்து கொண்டிருக்க, யாருக்குமே பாதுகாப்பற்ற இந்த Reels ஆட்சியை யாருக்காக நடத்துகிறார் முதலமைச்சர்?

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இனியும் மிக்சர் சாப்பிட்டிக் கொண்டிருக்காமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சர் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User