மேற்கு வங்கம்: `ரூ.5-க்கு மீன் சாப்பாடு' - புதிய பா.ஜ.க அரசு அறிவிப்பு!

May 14, 2026 - 09:31
0
மேற்கு வங்கம்: `ரூ.5-க்கு மீன் சாப்பாடு' - புதிய பா.ஜ.க அரசு அறிவிப்பு!

மேற்கு வங்க உணவில் மீன் பிரதானமாக இடம் பெறுவது வழக்கம். ஆனால் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் மீன் வெட்ட தடை விதிப்பார்கள் என்று முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி பரப்புரை செய்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பா.ஜ.க தலைவர்கள் பரப்புரையின் போது மீன்கறி சாப்பிட்டு நாங்கள் மீன்கள் வெட்டப்படுவதை தடுக்க மாட்டோம் என்று தெரிவித்தனர். பெங்காலி மக்களுக்கு மீன் என்பது வெறும் உணவு மட்டுமல்ல. அது அவர்களின் அடையாளமாக இருக்கிறது. அது அவர்களின் அன்றாட வாழ்க்கையோடு ஒன்றிப்போன ஒன்றாக இருக்கிறது. ஏழைகளாக இருந்தாலும் அவர்களது வீட்டில் நிச்சயம் மீன் குழம்பு இருக்கும்.

தற்போது தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பா.ஜ.க அரசு மக்களை தங்கள் பக்கம் தக்கவைத்துக்கொள்ளும் விதமாக மாநிலம் முழுவதும் செயல்படும் அரசு கேன்டீன்களில் மீன் சாப்பாடு வெறும் 5 ரூபாய்க்கு வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான திட்டத்திற்கு அரசின் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டதாகவும், விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்று அரசு தெரிவித்துள்ளது.

இத்திட்டம் மேற்கு வங்கம் முழுவதும் தற்போது அரசு உணவகங்களின் மூலமாகவே செயல்படுத்தப்பட இருக்கிறது.

இந்த உணவகங்கள் தற்போது குறைந்த விலையில் உணவை வழங்குகிறது. இதன் மூலம் பெருமளவிலான தினக்கூலிகள், தொழிலாளர்கள், போக்குவரத்து ஊழியர்கள், குறைந்த வருவாய் பெறும் குடும்பங்கள் மற்றும் நகர்ப்புற ஏழைகள் பயன்பட்டு வருகின்றனர். தற்போது இதில் முட்டையும், சாப்பாடும் ரூ.5க்கு வழங்கப்பட்டு வருகிறது. அதனையே மாற்றி அதே கட்டணத்தில் மீன் குழம்பு சாப்பாடும் வழங்க திட்டமிட்டு இருக்கின்றனர். பல சாதாரண பெங்காலி மக்களுக்கு, வெறும் 5 ரூபாய்க்கு பாரம்பர்யமிக்க 'மாச்-பாத்' (மீன்-சாதம்) உணவு திட்டம் வெறு

ம் மானிய விலை உணவாக மட்டும் பார்க்கப்படவில்லை. மாறாக, அது பெங்காலி அடையாளத்துடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு வாழ்க்கை முறையை பாதுகாப்பதாகவே பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User