கரூர்: தாய், மகளுக்கு கத்திக் குத்து; பலியான தாய்... சிகிச்சையில் மக்கள்! - என்ன நடந்தது?

Jul 30, 2026 - 23:00
0
கரூர்: தாய், மகளுக்கு கத்திக் குத்து; பலியான தாய்... சிகிச்சையில் மக்கள்! - என்ன நடந்தது?

கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த நங்கவரம் அருகே எம்.ஆர்.பட்டியைச் சேர்ந்த சின்னசாமி என்பவரின் மனைவி பாப்பாம்மாள் (வயது: 65). இவர் மகள் மஞ்சுளா (வயது: 42). இவர்கள் இருவரும் வீட்டில் தனியாக இருந்தபோது வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள், பாப்பம்மாள் மற்றும் மஞ்சுளாவை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில், படுகாயமடைந்த தாய் பாப்பம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், அவர் மகள் மஞ்சுளா காயமடைந்தார். இது குறித்து, தகவலறிந்த நங்கவரம் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று மகள் மஞ்சுளாவை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், உயிரிழந்த அந்தப் பெண்ணின் தாய் பாப்பம்மாள் உடலை உடற்கூறாய்வு செய்வதற்காக அனுப்பி வைத்தனர்.

kulithalai

மேலும், கத்திக் குத்து சம்பவம் குறித்து தகவலறிந்த கரூர் எஸ்.பி ஹரிகிரண் பிரசாத், சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. கை ரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்ட பாப்பம்மாளின் பேத்தி பாட்டி பாப்பம்மாள் வீட்டிற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதனால், அவரை தேடி கோயமுத்தூருக்கு காவல்துறையினர் சென்றுள்ளனர். தாய் மற்றும் மகளை மர்ம நபர்கள் கத்தியால் குத்திய சம்பவம், குளித்தலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User