`விவேக் சாரை AI மூலம் கொண்டுவர விரும்பலை' - விகடன் மேடையில் மீசைய முறுக்கு 2 குறித்து ஹிப்ஹாப் ஆதி

Jul 03, 2026 - 21:31
0
`விவேக் சாரை AI மூலம் கொண்டுவர  விரும்பலை' - விகடன் மேடையில் மீசைய முறுக்கு 2 குறித்து ஹிப்ஹாப் ஆதி

சினிமா விருதுகள் 2025-ல் கலந்துகொண்டார் நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் ஆதி.

அவர் விழா மேடையில், `மீசைய முறுக்கு 2’ குறித்துப் பகிர்ந்துகொண்டார்... `` `மீசைய முறுக்கு 2’ போஸ்ட் புரொடக்‌ஷன் வொர்க்கில் இருக்கிறது.

ஆகஸ்ட், செப்டம்பரில் `மீசைய முறுக்கு 2’ திரைப்படம் வெளியாகும்.

இந்தப் படம் மியூசிக்கல் படம். அதனால, இந்தத் திரைப்படத்தில் நிறைய பாடல்கள் இருக்கும்.

ஹர்ஷத் கான் - ஹிப்ஹாப் ஆதி
ஹர்ஷத் கான் - ஹிப்ஹாப் ஆதி

'மீசையை முறுக்கு 1' எப்படி ஒரு மியூசிக்கலோ, அதே மாதிரி 'மீசை முறுக்கு 2'-வும் ஒரு மியூசிக்கல் படம்தான்.

இந்தப் படத்தின் ஒவ்வொரு பாடலும் அடுத்தடுத்து வெளியாகவிருக்கிறது. படம் வர்றதுக்கு முன்னாடி வரைக்கும் பாடல்கள் ரிலீஸ் பண்ணிட்டு இருக்கப்போறோம்.

`மீசைய முறுக்கு 1’-ல நெறைய சீன்ஸ்ல விவேக் சாரை அப்படி ரசிப்போம்... கொண்டாடுவோம்.

`மீசைய முறுக்கு 2’-ல அவரை ரொம்ப மிஸ் பண்ணுறோம். இந்தப் படம் எடுக்கும்போது நெறைய இடத்துல அவரோட நினைவுகள் வந்தது. அதுவும் ஒரு அப்பா-பையனோட கதை, இதுவும் ஒரு அப்பா-பையன் இருக்காங்க.

விவேக் சாரை ஆக்சுவலா மிஸ் பண்றேன். அவர் இப்போ இருந்திருந்தா சூப்பரா இருந்திருக்கும். அவரை நாங்க ஏஐ பண்ணி இந்த உலகத்துல ஃபிட் பண்ண விரும்பலை. ஆனா, படத்துல எப்படியாவது அவருடைய குரலையாவது நாங்க கொண்டு வந்துருவோம்" என்றார்.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள், 2025
ஆனந்த விகடன் சினிமா விருதுகள், 2025

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User