'நாங்கதான் ஒரிஜினல் அதிமுக!' - சபாநாயகரிடம் மீண்டும் முறையிட்ட அதிமுக-வின் கோஷ்டிகள்!

May 14, 2026 - 13:02
0
'நாங்கதான் ஒரிஜினல் அதிமுக!' - சபாநாயகரிடம் மீண்டும் முறையிட்ட அதிமுக-வின் கோஷ்டிகள்!

அதிமுக எடப்பாடி பழனிசாமி அணி மற்றும் சி.வி.சண்முகம் அணி இரண்டாக பிளவு பட்டு நிற்கும் நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் இரு கோஷ்டியினரும் சபாநாயகரை சந்தித்து 'நாங்கள்தான் ஒரிஜினல் அதிமுகவினர்!' என உரிமை கோரியிருக்கின்றனர்.

EPS Faction
EPS Faction

தவெகவுக்கு ஆதரவளிக்கும் விவகாரத்தில் ஏற்பட்ட கருத்து மோதலில் அதிமுக எடப்பாடி அணி மற்றும் சி.வி.சண்முகம் அணி என இரண்டாக பிளவு பட்டிருக்கிறது. நேற்று சட்டமன்றத்தில் நடந்த தவெக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பிலும், எடப்பாடி ஆதரவாளர்களான 22 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எதிராகவும் சி.வி.சண்முகம் தரப்பின் 25 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு ஆதரவாகவும் வாக்களித்திருந்தனர்.

சட்டமன்றத்திலேயே இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் நடந்திருந்தது. இதைத்தொடர்ந்து தனது இல்லத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த சி.வி.சண்முகம், 'திமுக ஆதரவுடன் எடப்பாடி முதல்வராக முயற்சி செய்தார்' எனக் கடுமையாக குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட எம்.எல்.ஏக்களின் கட்சிப் பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்திருந்தார். அவர்களின் இடங்களில் புதிய மாவட்டச் செயலாளர்களை நியமித்தார்.

CV சண்முகம்
CV சண்முகம்

இதைத்தொடர்ந்து அதிமுகவின் இருபிரிவினரும் இன்று சபாநாயகரை சந்திக்க தலைமைச் செயலகம் வந்திருந்தனர். எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தளவாய் சுந்தரம் ஆகியோரும் சி.வி.சண்முகம் அணி சார்பில் சி.விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா, கே.பி.அன்பழகன் போன்றோர் சபாநாயகரை சந்திக்க வந்திருந்தனர். அதிக எம்.எல்.ஏக்களின் ஆதரவு எங்களுக்குதான் இருக்கிறது என்பதால் எங்களை அதிமுகவாக அறிவிக்க வேண்டும் என சி.வி.சண்முகம் தரப்பு கோரியிருக்கிறது. 'கட்சியில் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கே இருக்கிறது. எனவே பொதுச்செயலாளர் நியமிப்பவரையே கொறடாவாக ஏற்க வேண்டும்' என்றும் கோரியிருக்கின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User