"இன்றும் இருக்கிறோம்; நாளையும் இருப்போம்" - திமுக கூட்டணியில் இருந்து விலகாத முஸ்லீம் லீக்

May 06, 2026 - 10:31
0
"இன்றும் இருக்கிறோம்; நாளையும் இருப்போம்" - திமுக கூட்டணியில் இருந்து விலகாத முஸ்லீம் லீக்

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், அந்தக் கட்சி வேறுசில கட்சிகளின் ஆதரவை நாடி வருகிறது.

இந்தத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வாணியம்பாடி மற்றும் பாபநாசம் தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தக் கட்சி திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தவெக உடன் சேருமா என்கிற கேள்வி இருந்து வந்தது. அந்தக் கேள்விக்கான பதிலை தந்துள்ளார் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர். கே.எம்.காதர் மொகிதீன்.

காதர் மொகிதீன்
காதர் மொகிதீன்

"தமிழகத்தில் தொங்கு சட்டசபை முஸ்லிம் லீக்கின் நிலைப்பாடு

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்

உடன் நேற்றும் இருந்தோம்!

இன்றும் இருக்கிறோம்!!

நாளையும் இருப்போம்!!!"

என்று இந்தக் கட்சியின் எக்ஸ் தளத்தில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User