காதல் விவகாரத்தில் வீடு புகுந்து சிறுமியின் தாய் கொலை; சிகிச்சையிலிருந்த தந்தையும் உயிரிழந்த சோகம்

Oct 29, 2026 - 13:30
0
காதல் விவகாரத்தில் வீடு புகுந்து சிறுமியின் தாய் கொலை; சிகிச்சையிலிருந்த தந்தையும் உயிரிழந்த சோகம்

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள முதலூரைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன். இவரது மனைவி மேரி விஜிலா. இவர்களுக்கு 15 மற்றும் 14 வயதில் இரண்டு மகள்களும், 8 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

முத்துக்கிருஷ்ணனின் 15 வயதான மூத்த மகள், ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த புரோட்டா மாஸ்டரான ஞானபிரகாஷ் என்பவரைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் காதல் விவகாரம் குடும்பத்தினருக்குத் தெரிய வந்ததைத் தொடர்ந்து, அவர்கள் கண்டித்துள்ளனர்.

மத்திய சிறை - பாளையங்கோட்டை
மத்திய சிறை - பாளையங்கோட்டை

இதனால், அந்தச் சிறுமி ஞானபிரகாஷிடம் இருந்து விலகி பேசுவதைத் தவிர்த்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் கடந்த சில நாட்களாகவே ஞானபிரகாஷ் அந்தப் பெண்ணிடம் பலமுறை போனில் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால், அந்தச் சிறுமி  அவரது நம்பரை பிளாக்கில் போட்டுள்ளாராம்.

இதில் ஞானபிரகாஷ் கடும் கோபத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 23-ம் தேதி அதிகாலையில் முத்துக்கிருஷ்ணனின் வீட்டுக்கு கையில் அரிவாளுடன் சென்றுள்ளார்.

அரிவாளுடன் வந்த ஞானபிரகாஷைப் பார்த்ததும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், சிறுமியின் தந்தை முத்துகிருஷ்ணன், தாய் மேரி விஜிலா, அவரது  தம்பி ஆகிய மூவரையும் சரமாரியாக அரிவாளால் தாக்கியுள்ளார்.  

இதில் தாய் மேரி விஜிலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த முத்துகிருஷ்ணன் அவரது மகன் இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

நெல்லை அரசு மருத்துவமனை
நெல்லை அரசு மருத்துவமனை

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி தந்தை முத்துகிருஷ்ணன் இன்று அதிகாலையில் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. மகனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவம் குறித்து ஏற்கனவே குற்றவாளியான ஞானபிரகாஷைக் கைது செய்து செய்த தட்டார்மடம் காவல் நிலைய போலீஸார், விசாரணைக்குப் பிறகு ஞானபிரகாஷை சாத்தான்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User