TN 07 CM 2031: சர்ச்சைக்குள்ளான திருமாவளவன் பயணித்த கார் எண்; என்ன சொல்கிறது விசிக?

Sep 21, 2026 - 19:31
0
TN 07 CM 2031: சர்ச்சைக்குள்ளான திருமாவளவன் பயணித்த கார் எண்; என்ன சொல்கிறது விசிக?

சென்னை பூவிருந்தவல்லி அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஈவிபி (EVP) பிலிம் சிட்டியில், தனியார் ஊடகக் குழு ஒன்று ஒருங்கிணைத்த `திருமா 35 ஆண்டுகள்' சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் காரில் வருகை தந்தார். நடிகரும், இப்போதைய முதல்வருமான விஜய் நடித்த GOAT திரைப்படத்தில் இடம்பெற்ற ”TN 07 CM 2026” காரைப் போல, திருமாவளவன் வந்த காரில் `TN 07 CM 2031' என்றப் பதிவெண் பலகை பொருத்தப்பட்டிருந்தது.

இது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்தது. இருப்பினும், இந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து சர்ச்சையும் எழுந்தது.

விசிக தலைவர் திருமாவளவன்
விசிக தலைவர் திருமாவளவன்

அந்தப் பதிவெண்ணை ஆய்வு செய்த நெட்டிசன்கள், அது 2018-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒரு இருசக்கர வாகனத்திற்குரிய எண் என்பதைக் கண்டறிந்தனர். இதன் மூலம், போலி பதிவெண் பலகை கொண்ட காரில் திருமாவளவன் பயணித்ததாகக் கூறி இணையத்தில் விமர்சனங்களும் விவாதங்களும் தீவிரமடைந்தன.

இந்த நிலையில், விசிக மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ். பாலஜி இந்த விவகாரம் குறித்து பேசும்போது, ```திருமா 35 ஆண்டுகள்' என்ற நிகழ்ச்சியை EVP ஃபிலிம் சிட்டியில் தனியார் ஊடகக் குழு ஒன்று ஒருங்கிணைத்தது. நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளும், விருது வழங்குவது போன்ற அனைத்துப் பொறுப்புகளும் அவர்கள்தாம் ஏற்றுக் கொண்டனர். மேலும், நிகழ்ச்சி ஒருங்கிணைத்த குழுவினர் PHOTO SHOOT-காக இந்தக் காரைப் பயன்படுத்தியது. அந்த PHOTO SHOOT, EVP அரங்கில் எடுக்கப்பட்டது" எனத் தெரிவித்திருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User