Rakka: "ஒரே நேரத்தில் 37 பேர்!" - கின்னஸ் சாதனை படைத்த அட்லீ - அல்லு அர்ஜூனின் 'ராக்கா' படம்!

Sep 21, 2026 - 19:31
0
Rakka: "ஒரே நேரத்தில் 37 பேர்!" - கின்னஸ் சாதனை படைத்த அட்லீ - அல்லு அர்ஜூனின் 'ராக்கா' படம்!

'ஜவான்' படத்தின் வெற்றிக்குப் பிறகு அட்லீ இயக்கும் 'ராக்கா' படத்தில் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கிறார்.

அல்லு அர்ஜுனும் 'புஷ்பா 2' படத்தின் பேன் இந்தியா வெற்றிக்குப் பிறகு அட்லீயுடன் கூட்டணி அமைத்திருக்கிறார்.

இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பெரும் பொருட்செலவில், வரலாற்றுப் படமாக இது உருவாகிறது என்றும் கூறுகிறார்கள்.

Atlee - Allu Arjun - Rakka
Atlee - Allu Arjun - Rakka

அத்தோடு, கிராபிக்ஸுக்கும் அதிக முக்கியத்துவம் கொண்ட கதை இது எனவும் பேசப்படுகிறது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

இன்று அட்லீயின் பிறந்தநாளை முன்னிட்டு, 'ராக்கா' படம் தொடர்பான சிறப்புத் தகவல் ஒன்றையும் படக்குழுவினர் பகிர்ந்திருக்கிறார்கள்.

நேரலை மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரே நேரத்தில் 37 நடிகர்களைக் கொண்டு இந்தப் படத்தின் ஒரு காட்சியைப் படம் பிடித்திருக்கிறார்கள்.

அதன் மூலம் ஒரே நேரத்தில் அதிக நபர்களைக் கொண்டு நேரலை மோஷன்-கேப்சர் தொழில்நுட்பம் மூலம் படம்பிடிக்கப்பட்ட படம் என்ற கின்னஸ் உலக சாதனையை இப்படம் படைத்திருக்கிறது.

இந்தத் தகவலைப் பகிர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம், "வரலாறு படைக்கப்பட்டது. இந்திய சினிமாவை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லும் ஒரு சர்வதேச வெற்றி.

ஒரே நேரத்தில் 37 கலைஞர்கள் படம்பிடிக்கப்பட்டதன் மூலம், "ஒரே நேரத்தில் அதிக நபர்களைக் கொண்டு நேரலை மோஷன்-கேப்சர் (Motion-Captured in Real-Time) செய்யப்பட்ட திரைப்படம்" என்ற கின்னஸ் உலக சாதனையை ராக்கா படைத்துள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை அடையாளம் காணும் வகையில், அல்லு அர்ஜுன் மற்றும் அட்லீயும் கின்னஸ் உலக சாதனைச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டனர்." எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்கள்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User