'அவரிடம் அமைதி இருக்கிறது; ஆனால் உண்மையில் அமைதியானவர் அல்ல; டஃப் ஆனவர்!'- மோடியை பாராட்டிய ட்ரம்ப்| Live Updates

Jun 20, 2026 - 10:31
0
'அவரிடம் அமைதி இருக்கிறது; ஆனால்  உண்மையில் அமைதியானவர் அல்ல; டஃப் ஆனவர்!'- மோடியை பாராட்டிய ட்ரம்ப்| Live Updates

'மோடி டஃப் ஆனவர்'-  அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புகழ்ந்து பேசியிருக்கிறார்.

சமீபத்தில் நடந்த ஜி 7 மாநாட்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் உங்கள் பிடித்த தலைவர் யார் என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த ட்ரம்ப், " மோடி மிகவும் சிறந்தவர் என்று நான் நினைக்கிறேன்.

ட்ரம்ப் - மோடி
ட்ரம்ப் - மோடி

இந்தியாவில் முன்பு அடிக்கடி பிரதமர்கள் மாறிக்கொண்டே இருந்த சூழலில் பிரதமர் மோடி பொறுப்பேற்று கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக நிலையான ஆட்சியை வழங்கி வருகிறார். மோடியை எனக்கு நன்றாக தெரியும். அவரிடம் ஒரு சிறந்த அமைதி இருக்கிறது. ஆனால் அவர் உண்மையில் அமைதியானவர் அல்ல. மிகவும் டஃப் ஆனவர்" என்று கூறியிருக்கிறார்.

ட்ரம்ப் மீது ஒபாமா குற்றச்சாட்டு!

அமெரிக்கா, ஈரான் இடையே 14 அம்சங்களை உள்ளடக்கிய போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம், கையெழுத்தானது. அதிபர்கள் ட்ரம்ப் மற்றும் மசூத் பெசேஷ்கியா இருவரும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இதையடுத்து இரு தரப்பும் சுவிட்சர்லாந்தில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்தன. இந்த பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ், ஈரான் அதிகாரிகள் சுவிட்சர்லாந்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமெரிக்கா - ஈரான் இடையே சுவிட்சர்லாந்தில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ட்ரம்ப்- பராக் ஒபாமா
ட்ரம்ப்- பராக் ஒபாமா

பேச்சுவார்த்தை ரத்தானதால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இந்நிலையில் போர் குறித்து அமெரிக்கா முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ட்ரம்ப் மீது குற்றம் சாட்டியிருக்கிறார். இதுதொடர்பாக பேசியிருக்கும் அவர், " தற்போது ஒரு போரை நடத்தி, பில்லியன் கணக்கான டாலர்களை வீணடித்து, ஏகப்பட்ட உயிர்களையும் இழந்துள்ளோம்.

இவ்வளவு இழந்தும், போர் தொடங்குவதற்கு முன்பு இருந்தை விட, ஒரு மோசமான இடத்திற்குத்தான் வந்து நிற்கிறோம். ஈரான் அணு ஆயுதம் தயாரிக்காது என ஏற்கனவே ஒரு நல்ல ஒப்பந்தம் இருந்தது. ட்ரம்ப் நிர்வாகம் அதிலிருந்து வெளியேறியதால்தான், அணுசக்தி திறனை ஈரான் மேலும் அதிகரித்தது" என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User