'டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல் நடந்துள்ளது' - அமைச்சர் விக்னேஷ் பகீர் குற்றச்சாட்டு

Jun 06, 2026 - 21:31
0
'டாஸ்மாக்கில்  ரூ.3,600 கோடி ஊழல் நடந்துள்ளது' - அமைச்சர் விக்னேஷ் பகீர் குற்றச்சாட்டு

கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் விக்னேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவதே எங்களது லட்சியம். இந்த இலக்கை அடையச் சுதந்திரமாகச் செயல்படுமாறு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளோம். சில மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். போதைப்பொருள் சங்கிலியை உடைக்க வேண்டியது அவசியம்.

விக்னேஷ்
விக்னேஷ்

தமிழ்நாட்டிற்குள் எந்த வழியிலும் போதைப்பொருள் நுழைவதை அனுமதிக்க மாட்டோம். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போன்று பேசுபவர்கள் நாங்கள் கிடையாது. டாஸ்மாக் துறையில் தற்போது மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி உள்ளோம். தனிநபர்கள் மற்றும் கட்சிக்காரர்களிடம் சென்று கொண்டிருந்த ரூ.1,000 கோடி ஊழல் பணம் தற்போது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கான முறையான அரசாணை ஜூன் 5-ஆம் தேதி கொண்டுவரப்பட்டுள்ளது. டாஸ்மாக் மட்டுமல்லாது எந்தத் துறையிலும் இனி ஊழல் இருக்காது. டாஸ்மாக்கில் மாதம் ரூ.100 கோடி வீதம் தனிநபர்களின் கணக்கிற்குச் சென்ற மாபெரும் ஊழல் நடந்துள்ளது. அந்தவகையில் ரூ.3,600 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளத. மதுபான விற்பனையில் மட்டுமின்றி, கொள்முதலிலும் ஊழல் நடைபெற்றுள்ளது.' என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User