தாய் கிழவி: "எங்க அப்பா இன்னும் சாகல.!"- மேடையில் கண்கலங்கிய சிவகார்த்திகேயன்

Mar 11, 2026 - 18:01
 0
தாய் கிழவி: "எங்க அப்பா இன்னும் சாகல.!"-  மேடையில் கண்கலங்கிய சிவகார்த்திகேயன்

சிவகுமார் முருகேசன் இயக்கித்தில், ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருந்த படம் ‘தாய் கிழவி’.

இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்க, நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருந்தார். கடந்த மாதம் (பிப்.27) வெளியான இந்தத் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

தாய் கிழவி
தாய் கிழவி

இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா இன்று (மார்ச்.11) நடைப்பெற்றிருக்கிறது.

இதில் கலந்துகொண்டு பேசிய சிவகார்த்திகேயன், " 'நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு' படத்தைத் தயாரித்திருந்தேன். ப்ரஸ் ஷோவில் படம் முடியும்போது கார்த்திக் வேணுகோபாலின் பெயர் வந்தது. எல்லோரும் அதைப் பார்த்து கைத்தட்டினார்கள்.

அந்த சமயத்தில் கார்த்திக் வேணுகோபாலின் தந்தை எமோஷனலாகி அவரை கட்டிப்பிடித்துக்கொண்டார். அதே மாதிரியான ஒரு தருணம் மீண்டும் நடந்தது.

‘தாய் கிழவி’ படத்தைப் பார்த்தப் பிறகு சிவகுமார் முருகேஷனின் அப்பா எங்கள் இருவரை கட்டி அனைத்துக்கொண்டார்.

அந்த செகண்ட் எங்க அப்பா இன்னும் சாகவில்லை என்பதை உணர்ந்தேன்" என்று சிவகார்த்திகேயன் கண் கலங்கியிருக்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், " மனித்துவிடுங்கள் நான் கொஞ்சம் எமோஷனல் ஆன நபர். அந்தத் தருணம் எல்லாம் தான் எனக்கு ஒரு நிறைவைக் கொடுக்கிறது.

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

'அமரன்', 'தாய் கிழவி', 'கனா' மாதிரியான படங்களுக்கு வெற்றி கிடைக்கும்போது ஒரு நிறைவையும், அமைதியையும் கொடுக்கிறது.

அந்த அமைதி இன்னும் நிறைய உழைக்க வேண்டும் என்ற விஷயத்தை சொல்லிக்கொண்டே இருக்கிறது.

இங்கு வெற்றி என்பது விளையாட்டிற்கு கூட விளையாட்டாக கிடைக்காது. அதற்கு நிறைய உழைக்க வேண்டும்.

அதுவும் ஒரு குழுவோடு இணைந்து உழைத்தால் வெற்றி நிச்சயமாக கிடைக்கும் என்பதை இந்த மேடை சொல்லிக்கொடுத்திருக்கிறது" என்று எமோஷனலாகப் பேசியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0