'அதிமுக நல்லா இருக்கணும்; விசிக அமைச்சரவையில் பங்கேற்க வேண்டும்!' - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விருப்பம்

May 20, 2026 - 11:31
0
'அதிமுக நல்லா இருக்கணும்; விசிக அமைச்சரவையில் பங்கேற்க வேண்டும்!' - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விருப்பம்

அயோத்திதாச பண்டிதரின் பிறந்தநாளை முன்னிட்டு கிண்டியிலுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்திருந்தார் முதல்வர் விஜய். இந்நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விசிகவை அமைச்சரவையில் இடம்பெறக் கோரி அழைப்பு விடுத்திருக்கிறார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

அவர் பேசியதாவது, 'கூடிய விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். சமூகநீதியின் அடிப்படையில் இயங்கும் கட்சிகள் அமைச்சரவையில் இணைய வேண்டும் என்பது முதல்வரின் விருப்பம்.

விசிக மற்றும் ஐ.யூ.எம்.எல் கட்சியின் அமைச்சரவையில் இடம்பெற வேண்டுமென முதல்வர் நினைக்கிறார். அமைச்சரவை ஒரு குடும்பம் போல இருக்க வேண்டும். விசிகவும் ஐ.யூ.எம்.எல் கட்சியினரும் கலந்தாலோசித்துவிட்டு முடிவை சொல்வதாக கூறியிருக்கிறார்கள்

அமைச்சர் ஆதவ்
அமைச்சர் ஆதவ்

தமிழ்நாட்டில் கவர்னர் ஆட்சியை கொண்டு வர முயன்றார்கள். இன்னொரு பக்கம் திமுகவும் அதிமுகவும் புறவாசல் வழியாக ஆட்சியை பிடிக்க முயன்றனர். திமுக தங்களின் கொள்கைகளை மறந்துவிட்டு அதிமுகவுடன் இணைய முற்பட்டது. அந்த அதிருப்தியில்தான் சி.வி.சண்முகம் வெளியே வந்து பேசினார்.

அவர் அமைச்சர் பதவிக்காகவோ அதிகாரத்துக்காகவோ பேசவில்லை. அதிமுகவை நாங்கள் தோழமையுடன் தான் பார்க்கிறோம். அந்த கட்சி நன்றாக இருக்க வேண்டும்' என்றார்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User