Serial Update: டிவி ஏரியாவில் பறக்கும் TVK கொடி; 'மேன்சன் குத்து' பாடலில் முதலில் ஆட மறுத்த ஆனந்தி

Apr 7, 2026 - 10:30
 0
Serial Update: டிவி ஏரியாவில் பறக்கும் TVK கொடி; 'மேன்சன் குத்து' பாடலில் முதலில் ஆட மறுத்த ஆனந்தி

டிவி ஏரியாவில் டிவிகே கொடி!

வரும் தேர்தலில் புதிதாகக் களம் காணூம் தமிழக வெற்றிக் கழகத்துக்கு சீரியல் ஏரியாவிலிருந்து பலர் தங்கள் ஆதரவைத் தெரிவிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

ஷப்னம்
ஷப்னம்

'தெய்வ மகள்', 'மாரி' உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்த ஷ்ப்னம் விஜய்யின் தீவிர ரசிகையாக இருந்தவர். இவரது தந்தை தமிழக அரசின் சுகாதாரத்துறையில் பணிபுரிந்து சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றவர். ஓய்வு பெற்றதுமே தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

தவெக நடத்திய விக்கிரவாண்டி மாநாட்டில் கலந்து கொண்டார். 'எங்க அப்பா மட்டுமில்ல, குடும்பத்தோட நாங்க இப்ப தவெக' எனச் சொல்லும் ஷப்னம், தன்னுடைய நட்பு வட்டத்திலும் தவெகவுக்கு ஆதரவு திரட்டத் தொடங்கியிருக்கிறாராம்.

தங்கபாண்டி - சாந்தினி
தங்கபாண்டி - சாந்தினி

'ஏங்க... கூமாப்பட்டிக்கு வாங்க' என ரீல்ஸ் போட்டு வைரலாகி அதன் மூலம் டிவிக்குள் நுழைந்த தங்கப்பாண்டிக்கு ஜோடியாக வரும் நடிகை சாந்தினி பிரகாஷ் கட்சியில் சேர்ந்து உறூப்பினர் கார்டே வாங்கி விட்டார்.

'தமிழ்நாட்டின் வருங்கால நம்பிக்கையே தளபதிதான், அவருக்குக் கூடுகிற கூட்டமே அதுக்கு சாட்சி. அதனாலதான் ஊருக்கே சொல்லி அந்தக் கட்சியில சேர்ந்துட்டேன்' என்கிறார் இவர்.

vijith

'ரன்' உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்த நடிகர் விஜித் கோயம்புத்தூரில் தீவிரமான பிரச்சாரத்தில் இருக்கிறார்.

'தவெகவுல சீட் வாங்கிட்டீங்களா' எனக் கேட்டோம்.

''என் உடன்பிறந்த அண்ணன் சிங்காநல்லூரில் போட்டியிடுகிறார். வழக்கறிஞரா இந்தத் தொகுதியில ஏற்கனவே அவர் மக்களுக்கு நல்ல பரிச்சயம்தான். தளபதி இந்த முறை சீட் தந்ததும் பிரசாரத்தைத் தொடங்கிட்டோம்.

தொகுதிக்குள் நல்ல வரவேற்பு இருக்கு. போற இடமெல்லாம் இளைஞர்கள், பெண்கள், வயதானவங்க கூட ஆதரவா பேசுறாங்க, பார்க்கலாம்'' என்கிறார் இவர்.

ஆனந்தி
ஆனந்தி

நல்ல வேளை, முதல்ல மாட்டேன்னு சொன்னேன்!

'கருப்பு' படத்தில் தான் நடித்த சீன் எடிட்டிங்கில் போய் விட்டதாக சில தினங்களுக்கு முன்புதான் நம்மிடம் ஆதங்கப்பட்டிருந்தார் நடிகை ஆனந்தி.

வருத்தப்பட்டுப் புலம்பிய நேரமோ என்னவோ, '29' படத்தின் 'மேன்சன் குத்து' பாடலில் தோன்றி செமயாக ரீச் ஆகி விட்டார்.

'இந்தக் குத்துப் பாட்டுல ஆடியிருக்கிறதா சொன்னதே இல்லையே' எனக் கேட்டோம்,

'நான்தான் சொல்லியிருக்கேன்ல, முன்னாடியே சொன்னா அந்தக் காட்சிகள் எடிட்டிங்கில் போயிடுதுன்னு. இந்தப் பாட்டுக்கு முதல்ல கூப்பிட்டப்பக் கூட நான் பண்ணலன்னு 'நோ' சொல்லிட்டேன். ஏன்னா, முழுப்பாட்டுலயும் வருவேனான்னு கேட்டதுக்கு, 'இல்ல, பாட்டின் கடைசி அரை நிமிஷம் வருவீங்க'ன்னு சொன்னாங்க.

எவ்வளவு நேரம் வருவேன்னு உண்மையை அப்படியே சொன்ன டைரக்ஷன் டீமுடைய நேர்மை எனக்குப் பிடிச்சிருந்தது. தவிர, எடுக்கறதே முப்பது செகன்ட்ங்கிறப்ப அதுல எங்க எடிட் பண்ணப் போறாங்கனும் நினைச்சுதான் பிறகு ஓகே சொன்னேன்.

ஆனா சாங் ரிலீஸ் ஆனதுல இருந்து இப்ப மூணு நாளா ரெஸ்ட் இல்லாம போன் வந்துட்டே இருக்கு.

அந்தளவுக்கு ரெஜிட்ஸ்டர் ஆகியிருக்கு முகம்.

எனக்கே நம்ப முடியலை. முழுப் பாட்டுக்கும் ஆடியிருந்தா கூட இந்தளவு ரீச் கிடைச்சிருக்குமா தெரியல' என்றவர், இனிமே தமிழ் சினிமாவுல குத்துப்பாட்டுக்கு ஆடறதுக்கு என்னைக் கூப்பிட்டுடுவாங்களோனு தோணுது. எதுவும் நம்ம கையில இல்லை. நான் மறுத்ததும் வேற ஆர்ட்டிஸ்ட்டைத் தேடி யூனிட் போயிருந்தா எனக்கு இந்தப் பப்ளிசிட்டி கிடைச்சிருக்காது தானே'' என்கிறார் இவர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0