Sai Abhyankar: "கிறிஸ்டோபர் நோலன் படத்திற்கு இசையமைப்பது என் கனவு" - சாய் அபயங்கர்

Aug 18, 2026 - 11:31
0
Sai Abhyankar: "கிறிஸ்டோபர் நோலன் படத்திற்கு இசையமைப்பது என் கனவு" - சாய் அபயங்கர்

சுயாதீன இசைக்கலைஞராகத் தனது கரியரைத் தொடங்கிய சாய் அபயங்கர், இன்று சென்சேஷனல் இசையமைப்பாளராக உருவெடுத்திருக்கிறார்.

Sai Abhyankar
Sai Abhyankar

'இந்தியா டுடே' ஊடகத்தின் தமிழ்ப் பதிப்புத் தொடக்க விழாவில் கலந்துகொண்டவர், தன்னுடைய அடுத்தடுத்த படங்கள் குறித்தும், கிறிஸ்டோபர் நோலனுடன் இணைந்து பணிபுரிய வேண்டும் என்கிற ஆசை பற்றியும் பகிர்ந்திருக்கிறார்.

அவர் பேசுகையில், "ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்பது என் மிகப்பெரிய கனவு.

ரசிகர்கள் சிலர் ஏஐ மூலம் கிறிஸ்டோபர் நோலன் என் இசையைப் பற்றிப் பேசுவது போல ஒரு வீடியோ உருவாக்கியிருந்தார்கள்.

அந்தச் சம்பவம் நிஜ வாழ்க்கையிலும் ஒருநாள் நடக்கும் என்று நம்புகிறேன். அதற்காகத் தொடர்ந்து உழைப்பேன்" எனப் பகிர்ந்திருக்கிறார்.

சாய் அபயங்கர்
சாய் அபயங்கர்

இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் குறித்து, "தயவுசெய்து என்னை எமோஷனல் ஆக்காதீர்கள். என் வாழ்க்கையில் நான் தவறவிட்ட மிகப்பெரிய விஷயம் அதுதான்.

இனி அது சாத்தியமில்லை என்பதால் என்ன செய்வது என்று தெரியவில்லை. விஜய் சாருக்கு இசையமைப்பது என் ஆசையாக இருந்தது, வாய்ப்பு கிடைத்திருந்தால் 16 பாடல்கள் கொண்ட ஆல்பத்தைக் கொடுத்திருப்பேன்.

அவர் சினிமா ரசிகர்களின் ஹீரோவாக இருந்தார், ஆனால் இப்போது அனைவருக்குமான தலைவராக உயர்ந்திருக்கிறார்," எனப் பேசியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User