ரன் ரீரிலீஸ்: "விஜய் சார் 'ரன்' படத்தில் நடிக்காததற்குக் காரணம் இதுதான்" - லிங்குசாமி ஷேரிங்

Jul 07, 2026 - 12:31
0
ரன் ரீரிலீஸ்: "விஜய் சார் 'ரன்' படத்தில் நடிக்காததற்குக் காரணம் இதுதான்" - லிங்குசாமி ஷேரிங்

இயக்குநர் லிங்குசாமியின் 'அஞ்சான்' திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பு ரீரிலீஸ் ஆகியிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது அவருடைய 'ரன்' படத்தையும் ரீரிலீஸுக்குத் தயார் செய்திருக்கிறார்.

மாதவன், மீரா ஜாஸ்மின் எனப் பலரும் நடித்திருந்த இப்படம் 2002-ல் வெளியாகி, பெரிய அளவில் ஹிட் அடித்தது. மாதவனை ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றியதும் இப்படம்தான். ரீரிலீஸையொட்டி, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் இயக்குநர் லிங்குசாமி.

Lingusamy, Madhavan, Meera Jasmine
Lingusamy, Madhavan, Meera Jasmine

லிங்குசாமி, "'ரன்' திரைப்படத்தை விஜய் சாருக்கு பண்ணுவதற்காக ஏ.வி.எம்-லிருந்து என்னை அனுப்பினார்கள். கதை சொல்வதற்கு நான் எஸ்.ஏ.சி சாரைச் சந்தித்தேன். ஆனால், அப்போது விஜய் வேறு மாதிரியான படங்களை கமிட் செய்திருந்தார்.

இப்படியான படங்கள்தான் செய்ய வேண்டும் என இமேஜும் வைத்திருப்பார். என்னிடம் எஸ்.ஏ.சி சார், 'தம்பி இப்போது தமிழன் படத்தில் நடிக்கிறார்.

இப்போது ஒரு பெண் பின்னால் சுற்றும் கதையை தம்பி செய்தால் சரியாக இருக்காது' எனக் கூறிவிட்டார். பிறகு, 'சண்டக்கோழி' படமும் விஜய் சாரை வைத்துதான் நான் செய்யத் திட்டமிட்டிருந்தேன்.

ஆனால், அது மிஸ் ஆகிவிட்டது. பிறகு, 'வேட்டை' படத்தையும் அவரை வைத்துச் செய்வதற்குத்தான் நான் திட்டமிட்டிருந்தேன். ஆனால், அதுவும் மிஸ் ஆனது.

என்னுடைய படத்தை விரும்பிப் பார்ப்பவர்களும், விஜய் சாரின் ரசிகர்களும் என்னிடம் வந்து 'நீங்கள் விஜய் சாருக்கு ஏன் படம் பண்ணவில்லை? நீங்கள் இருவரும் இணைந்தால் நன்றாக இருக்கும்' எனச் சொல்வார்கள்.

இயக்குநர் லிங்குசாமி
இயக்குநர் லிங்குசாமி

ஒரு முறை 'லியோ' ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரைச் சந்தித்தபோது, 'படம்தான் செய்ய முடியவில்லை. ஒரு வார்டு கவுன்சிலராவது' எனச் சொன்னேன் (சிரித்துக்கொண்டே). அதற்கு அவர் அப்போது 'அண்ணா, சும்மா இருங்கண்கணா' என்றார்" எனப் பகிர்ந்துகொண்டார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User