ரூ.15 கோடி'பொருள்' - பங்கு பிரிப்பதில் மோதல்; சிவகங்கையில் சிக்கிய சர்வதேச குருவிகள்!

Jul 14, 2026 - 14:32
0
ரூ.15 கோடி'பொருள்' - பங்கு பிரிப்பதில் மோதல்; சிவகங்கையில் சிக்கிய சர்வதேச குருவிகள்!

சிக்கிய 4 'குருவிகள்'!

சிவகங்கையில் சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 3.100 கிலோ 'மெத்தாம்பேட்டமைன்' என்ற பயங்கர போதைப்பொருளைப் பறிமுதல் செய்த சிவகங்கை நகர் காவல்துறையினர், இது தொடர்பாகப் பதுங்கியிருந்த 4 சர்வதேசக் கடத்தல் ஆசாமிகளை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ்...

வசமாகச் சிக்கிய 4 'குருவிகள்'!

சிவகங்கை ,இந்திரா நகர் ரயில்வே கேட் அருகே உள்ள ஒரு வீட்டில் ஏதோ விபரீதமான விவகாரத்தில் நள்ளிரவில் பயங்கர தகராறு சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. 'சரக்கை' பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒரு கும்பல் அடிதடியில் ஈடுபட்டுக்கொண்டிருக்க, அக்கம் பக்கத்தினர் கொடுத்த ரகசியத் தகவலின் பேரில் சிவகங்கை டி.எஸ்.பி. அமல அட்வின் மற்றும் நகர் இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் தலைமையிலான போலீஸ் டீம் மின்னல் வேகத்தில் சம்பவ இடத்தைச் சுற்றி வளைத்தது.

அங்கே சந்தேகத்திற்கிடமான வகையில் ரத்தக் காயங்களுடன் அமர்ந்து, போதைப்பொருள் பொட்டலங்களைப் பங்கு பிரித்துக் கொண்டிருந்த 4 பேரை போலீஸார் பிடித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள்

அவர்களிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் ரசூல் தீன் (35) இளையான்குடி புதூர், திப்பு சுல்தான் தெரு. அபுசாகுபர் சாதிக் (26) திருவல்லிக்கேணி, சென்னை. முகமது ஹபீஸ் (28 ), ஜெயில் சந்திப்பு பகுதி, திருச்சி.முகமது ரபீக் என்ற பாபு (30) – வரகனேரி, திருச்சி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்களிடமிருந்து 3.100 கிலோ மெத்தாம்பேட்டமைன் போதைப்பொருள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த அதிரடி வேட்டை மற்றும் சர்வதேச கடத்தல் பின்னணி குறித்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் முழு விபரங்களையும் விவரித்தார்.

"நள்ளிரவு நேரத்தில் இந்திரா நகர் ரயில்வே கேட் பகுதியில் ஒரு கும்பல் பயங்கரமாக மோதிக் கொள்வதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக ஸ்பாட்டுக்குச் சென்ற எங்களுடைய அலர்ட் போலீஸ் டீம், சண்டையிட்டுக் கொண்டிருந்த 4 பேரையும் மடக்கிப் பிடித்தது.

அவர்களிடம் சோதித்தபோது வெள்ளைப் பொட்டலங்கள் இருந்தன. அது வீரியமிக்க சிந்தடிக் போதைப்பொருள் என்று தெரிந்ததும், உடனடியாக ஆய்வகப் பொறுப்பாளரை சோதனை உபகரணங்களுடன் ஸ்பாட்டுக்கே வரவழைத்துப் பரிசோதித்தோம். பரிசோதனையில், அது சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட 'மெத்தாம்பேட்டமைன்' என்பது 100% உறுதி செய்யப்பட்டது. கள்ளச்சந்தையில் இதன் மதிப்பு ஒரு கிலோவிற்கு 5 கோடி ரூபாய் வீதம் மொத்தம் 15 கோடி ரூபாய் ஆகும்.

கைது
கைது

இவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில்தான் அதிரவைக்கும் சர்வதேசக் கடத்தல் பிளான் அம்பலமானது. இந்த 15 கோடி ரூபாய் போதைப்பொருள் தமிழ்நாட்டிற்கானது அல்ல. இது சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக மலேசியாவிற்கு கடத்தப்படவிருந்த பொருள். கடத்தல் உலகத்தில் 'குருவிகள்' என்று அழைக்கப்படும் ஏஜென்ட்

டுகள் மூலம் இப்பொருளை மலேசியாவிற்கு வான்வழியாக அனுப்ப அவர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், ஏதோ சில காரணங்களால் பெங்களூரு விமான நிலையத்தில் இவர்களால் பிளான்படி விமானம் ஏற முடியாமல், கடத்தல் திட்டம் தோல்வியடைந்துள்ளது.

விமானம் மிஸ்ஸானதும், அந்தப் போதைப்பொருளை அதன் அசல் உரிமையாளரிடம் பத்திரமாக ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால், இவர்களுக்குள் பேராசை கண்ணை மறைத்திருக்கிறது. 'சரக்கை' நாமே பதுக்கி வைத்து, தமிழ்நாட்டிலேயே பங்கிட்டு விற்றுப் பணமாக மாற்றிவிடுவோம் எனத் திட்டமிட்டு சிவகங்கையில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருக்கிறார்கள்.

அங்கேதான், 'உனக்குக் கூடுதல்... எனக்குக் குறைவு...' எனப் பங்கு பிரிப்பதில் இவர்களுக்குள் நள்ளிரவில் பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. தற்போது போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின்கீழ் கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, பிடிபட்ட 4 பேரையும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பியுள்ளோம்.

இவர்களுக்குப் பின்னால் இருந்து இயக்கும் அந்தச் சர்வதேச 'பெரிய தலைகளை' மற்றும் போதைப்பொருள் எங்கிருந்து வந்தது, யாருக்கு அனுப்பப்பட இருந்தது உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் தனிப்படைகள் அமைத்து ரகசிய விசாரணை தீவிரமாகத் தொடர்ந்து வருகிறது .." என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User