RB Choudary: "இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து திரையுலகை வாழவைத்தவர்!" - ரஜினிகாந்த் இரங்கல்

May 06, 2026 - 07:02
0
RB Choudary: "இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து திரையுலகை வாழவைத்தவர்!" - ரஜினிகாந்த் இரங்கல்

தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.செளத்ரி விபத்தில் சிக்கி அகால மரணமடைந்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் முக்கியமான பல திரைப்படங்களை தயாரித்தவர், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி.

நாட்டாமை, பூவே உனக்காக, ஜில்லா, உள்ளிட்ட 99 திரைப்படங்களை தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் தயாரித்த ஆகப்பெரும் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி.

R B Choudary
R B Choudary

நேற்று மதியம் 3 மணியளவில், ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் இவர் சென்றுக் கொண்டிருந்த கார் விபத்தில் சிக்கியிருக்கிறது.

இந்த விபத்தில் இவருக்கு படுகாயங்கள் ஏற்பட்டிருக்கிறது. பிறகு, இவருடைய உயிரும் பிரிந்திருக்கிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல புதிய இயக்குநர்களை அறிமுகப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு.

தமிழ் சினிமாவின் பல்வேறு ஹிட் கமர்ஷியல் படங்களை தயாரித்தவர்தான், இன்று பல தயாரிப்பாளர்களுக்கும் இன்ஸ்பிரேஷன்.

தயாரிப்பாளர் ஆர். பி. செளத்ரிக்கு இரங்கல் தெரிவித்து பதிவிட்டிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்

RB Choudary
RB Choudary

"என் அருமை நண்பர் சூப்பர் குட் ஃப்லிம்ஸ் ஆர்.பி. செளத்ரி அவர்கள் தலை சிறந்த தயாரிப்பாளர். அருமையான மனிதர்.

எத்தனையோ இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து திரையுலகை வாழவைத்தவர். அவருடைய அகால மரணச் செய்தி எனக்கு பேரதிர்ச்சியையும், மிகுந்த வேதனையையும் அளிக்கிறது. அவர் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்" என பதிவிட்டுள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User