பிரவீன் சக்கரவர்த்தி பதிவு 'அதிக பிரசங்கித்தனம்' - கண்டனம் தெரிவித்த சிபிஎம் சண்முகம் - காரணம் என்ன?

Jun 05, 2026 - 12:31
0
பிரவீன் சக்கரவர்த்தி பதிவு 'அதிக பிரசங்கித்தனம்' - கண்டனம் தெரிவித்த சிபிஎம் சண்முகம் - காரணம் என்ன?

தமிழகத்தில் காலியான ஒரு மாநிலங்களவை எம்.பி சீட்டை தங்களின் கூட்டணி கட்சியான காங்கிரஸூக்கு கொடுத்திருக்கிறது தவெக.

காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்ரவர்த்தி எம்.பி தேர்தலுக்கு போட்டியிடுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பிரவீன் சக்ரவர்த்தி நன்றி தெரிவித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

பிரவீன் சக்கரவர்த்தி
பிரவீன் சக்கரவர்த்தி

அந்தப் பதிவில், " தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் (TVK+INC+VCK+IUML+CPI+CPM) கூட்டணியின் முதல் MP வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை பெருமையாகவும் பெரும் பொறுப்பாகவும் கருதுகிறேன்.

என் மீது நம்பிக்கை வைத்த ராகுல் காந்தி மற்றும் தமிழக முதல்வர் விஜய்க்கு மனமார்ந்த நன்றி.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, இந்திய நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் துணிச்சலான, விசுவாசமான மற்றும் நேர்மையான குரலாக ஒலிப்பேன் என்று லட்சக்கணக்கான கூட்டணித் தொண்டர்களுக்கு உறுதியளிக்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இதனை கண்டித்து சிபிஎம் மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகம், பதிவிட்டிருக்கிறார்.

அதில், " புதிய கூட்டணியின் சார்பில் தான் மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், அதில் சிபிஐ(எம்) பெயரையும் குறிப்பிட்டு இருப்பது தவறானது.

பெ.சண்முகம் - CPIM  மாநில செயலாளர்
பெ.சண்முகம் - CPIM மாநில செயலாளர்

கூட்டணி அமைப்பது குறித்தோ, இந்த வேட்பாளருக்கு ஆதரவு கேட்டோ யாரும் எங்களை அணுகவோ, ஆலோசிக்கவோ இல்லை.

தவெக ஆட்சி அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதன் அடிப்படையில் ஆதரவு தெரிவித்துள்ளோம் என்பது ஏற்கனவே தெளிவாக கூறப்பட்டுள்ளது.

பிரவீன் சக்கரவர்த்தி அவர்களின் பதிவை "அதிக பிரசங்கித்தனம்" என்று தான் சொல்ல வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User