Praggnanandhaa: நார்வே செஸ் தொடரில் கெய்மரை வீழ்த்தி பட்டம் வென்ற பிரக்ஞானந்தா; வரலாற்று சாதனை!

Jun 06, 2026 - 11:01
0
Praggnanandhaa: நார்வே செஸ் தொடரில் கெய்மரை வீழ்த்தி பட்டம் வென்ற பிரக்ஞானந்தா; வரலாற்று சாதனை!

நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியிருக்கிறார் பிரக்ஞானந்தா.

நார்வே செஸ் போட்டி மே 25 முதல் ஜூன் 5ஆம் தேதி வரை நடைபெற்றன. இதில் குகேஷ், பிரக்ஞானந்தா, மாக்னஸ் கால்சன் வின்சென்ட் கெய்மர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

செஸ் போட்டியின் ஒன்பதாவது சுற்றில் பிரக்ஞானந்தா கறுப்பு நிற காய்களுடனும் குகேஷ் வெள்ளை நிற காய்களுடனும் விளையாடினார்கள்.

நார்வே செஸ் போட்டி
நார்வே செஸ் போட்டி

இதில் குகேஷ் தனது 34 ஆவது நகர்த்தலில் தோல்வியை ஒப்புக்கொண்டார். பதக்கம் வெல்லும் போட்டியில் 0.5 புள்ளிகள் பின் தங்கியுள்ள பிரக்ஞானந்தா கடைசிப் போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.

இந்நிலையில் பரபரப்பாக நடந்த 10-வது சுற்றின் முடிவில் ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மரை (Vincent Keymer) தோற்கடித்து வெற்றி பெற்று அசத்தியிருக்கிறார்.

இதன் மூலம் நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User