NRI: லாபத்தை சரியாக கணக்கிட கற்றுக்கொள்ளுங்கள்; இல்லாவிடில், தவறான திட்டங்களில் பணத்தை இழப்பீர்கள்!

May 18, 2026 - 18:32
0
NRI: லாபத்தை சரியாக கணக்கிட கற்றுக்கொள்ளுங்கள்; இல்லாவிடில், தவறான திட்டங்களில் பணத்தை இழப்பீர்கள்!

''லாபத்தை சரியாகக் கணக்கிடுவது எப்படி என்று கற்றுக்கொள்ளவா வேண்டும்? அதுகூடவா நாங்கள் தெரியாமல் இருக்கிறோம்...'' இந்தக் கட்டுரையின் தலைப்பைப் பார்த்தவுடன் உங்களுக்கு இப்படி கேட்கத் தோன்றும்.

''ஒரு முதலீட்டில் 10 லட்சம் ரூபாயை முதலீட்டில் 10 வருஷத்துக்கு முதலீடு செய்கிறேன். 10 வருஷம் கழித்து, அது 20 லட்சம் ரூபாயாக அதிகரிக்கிறது. அதாவது, முதலீடு டபுள் ஆகியிருக்கிறது. 100% லாபம். இதுகூடவா எங்களுக்குத் தெரியாது...'' என்று கேள்வி கேட்பதும், அதற்கு மனக்கணக்கு போட்டுப் பார்ப்பதும் எனக்கு நன்றாக தெரிகிறது.

ஆனால், ஒரு முதலீட்டின் மூலம் கிடைக்கும் லாபத்தை இப்படி மட்டுமே கணக்கிடுவது சரியான அணுகுமுறைதானா என்று கேட்டால், இல்லை, இது சரியான அணுகுமுறை அல்ல என்றே சொல்லலாம். எப்படி?

அக்கவுன்ட் ஸ்டேட்மென்ட்

ஒரு முதலீட்டின் மூலம் கிடைக்கும் லாபத்தை இந்த முறையில் கணக்கிடுவதற்குப் பெயர் 'அப்சலுயுட் முறை' (Absolute) என்று பெயர். அதாவது, ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தைப் போடுகிறேன். சில பல ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கும் லாபத்தை மொத்தமாக அளவிடுவதுதான் இந்த 'அப்சலுயுட் முறை'.

உதாரணமாக, 2001-ஆம் ஆண்டில் ஒரு முதலீட்டில் ரூ.5 லட்சம் முதலீடு செய்கிறீர்கள். 2025-ல் அது 10 லட்சம் ரூபாயாக உயர்கிறது எனில், நீங்கள் 100% லாபம் கண்டிருக்கிறீர்கள். நீங்கள் முதலீடு செய்த பணம் ரூ.5 லட்சம், 2023 ரூ.8 லட்சமாக உயர்கிறது எனில், உங்கள் முதலீடு 60% லாபம் அடைந்திருக்கிறது என்று அர்த்தம்.

நம் முதலீட்டுக்குக் கிடைக்கும் லாபத்தை இப்படிப் பலரும் கணக்கிடும்போது, மிகப் பெரிய லாபம் அடைந்துவிட்டதாக நினைக்கிறோம். மீண்டும் மீண்டும் அதே முதலீட்டில் எல்லாப் பணத்தையும் முதலீடு செய்து அதே அளவு லாபம் காண முயற்சி செய்கிறோம்.

ஆனால், இப்படிக் கணக்கு போடுவதே சரியல்ல என்கிறபோது, இந்தக் கணக்கை வைத்து அதே முதலீட்டில் திரும்பத் திரும்ப பணம் போடுவதால், நமக்குப் பெரிய லாபம் கிடைக்காது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்!

அப்படி எனில், முதலீட்டின் மூலம் கிடைக்கும் லாபத்தை சரியாகக் கணக்கிடுவது எப்படி என்று பார்ப்போமா?

லாபக்|கணக்கீடு

ஒரு முதலீட்டுக்குக் கிடைக்கும் லாபத்தை மொத்தமாக 'அப்சலுயுட் முறை'யில் (Absolute) கணக்கிடுவதைவிட, ஆண்டுதோறும் எவ்வளவு லாபம் கிடைத்திருக்கிறது என்பதைப் பார்ப்பதுதான் லாபத்தை சரியாகக் கணக்கிடும் முறை ஆகும். இதற்கு 'Compounding Annual Growth Rate' - CAGR) என்று பெயர். இந்த முறையில் கணக்கிடுவது எப்படி சரி என்று பார்ப்போம்.

பொதுவாக, நமக்குக் கிடைக்கும் முதலீட்டு லாபத்தை நாம் எதனுடன் ஒப்பிட்டுப் பார்ப்போம். வங்கி எஃப்.டி மூலம் கிடைக்கும் எஃப்.டி.யுடன்தான். ஒருவர் ஒரு வங்கி எஃப்.டி.யில் ரூ.10 லட்சம் முதலீடு செய்கிறார். இதற்கு 6.5% வட்டி வருமானம் கிடைக்கிறது எனில், ஒவ்வொரு ஆண்டும் 6.5% வட்டி கிடைக்கும். வங்கி எஃப்.டி.யில் 5 வருடம் பணத்தை வைத்திருந்தாலும், 10 வருடங்கள் வைத்திருந்தாலும், ஆண்டுதோறும் 6.5% அளவுக்கு உங்களுக்கு வட்டி வருமானம் கிடைக்கும். வங்கி எஃப்.டி.யில் 10 லட்சம் ரூபாய் போட்டேன். அது 12 லட்சமாகத் திரும்பக் கிடைத்தது என்று நாம் சொல்வதில்லை.

எந்த முதலீட்டில் நாம் பணத்தைப் போட்டிருந்தாலும் இது மாதிரிதான் லாபத்தைக் கணக்கிட வேண்டும். உதாரணமாக, ஒரு முதலீட்டில் 30 லட்சம் ரூபாயை முதலீடு செய்கிறீர்கள். 10 ஆண்டுகளில் அது 60 லட்சம் ரூபாயாக அதிகரித்துவிட்டது எனில், உங்களுக்கு ஆண்டுதோறும் கிடைத்த லாப விகிதம் 11.61% என்று அர்த்தம். அதாவது, எஃப்.டி. வட்டி வருமானமான 6.5 சதவிகிதத்தைவிட சற்று அதிகமாக அதாவது 11.61% உங்களுக்கு லாபம் கிடைத்திருக்கிறது.

கால்குலேட்டர்

இப்படிக் கணக்கிட்டுப் பார்க்கும்போது, பாதுகாப்பான எஃப்.டி.யைவிட ரிஸ்க் எடுத்து நீங்கள் செய்த முதலீட்டின் மூலம் உங்களுக்கு எவ்வளவு அதிகமாக லாபம் கிடைத்திருக்கிறது என்பதை நீங்கள் துல்லியமாகக் கணக்கிட முடியும்.

உதாரணமாக, 2000 ஆண்டில் நீங்கள் ரூ.15 லட்சம் செலவு செய்து ஒரு இடத்தை வாங்கினீர்கள். 2025-ல் அதன் மதிப்பு ரூ.1.5 கோடி என்கிறபோது, 'அடேங்கப்பா, 1.35 கோடி லாபம்....' என்று வாயைப் பிளக்கிறோம். இது 'அப்சலுயுட் முறை'யில் மொத்தமாகக் கணக்கிடுவது.

இதே லாபத்தை சி.ஏ.ஜி.ஆர் முறையில் கணக்கிட்டுப் பார்த்தால், அது வெறும் 9.65% என்பது உங்களுக்குப் புரியும். அதாவது, கடந்த 25 ஆண்டுகளில் எஃப்.டி. வருமானம் 6.50 சதவிகிதத்தைவிட 3% வருமானம் உங்களுக்கு ஆண்டுதோறும் கிடைத்திருக்கிறது என்று அர்த்தம்.

இப்போது இன்னொரு உதாரணத்தைப் பார்ப்போம். 2000 ஆண்டில் நீங்கள் ரூ.15 லட்சத்தை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்கிறீர்கள். அடுத்த 25 ஆண்டுகளில் அதாவது, 2025-ல் இந்த 15 லட்சம் ரூபாய் முதலீடு ரூ.2 கோடியாக அதிகரிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது எத்தனை சதவிகிதத்தில் ஆண்டுதோறும் லாபத்தைத் தந்திருக்கிறது? 10.92% ஆண்டுதோறும் லாபம் கிடைத்திருக்கிறது. இடம் வாங்கியதன் மூலம் கிடைத்த லாபம் 9.65 சதவிகிதத்தைவிட வெறும் 1.25% தான் அதிகம். ஆனால், 50 லட்சம் ரூபாய் கூடுதலாக நமக்குக் கிடைக்கிறது. இதுவே 12% லாபம் கிடைத்தால்...? 2.55 கோடி கிடைக்கும்.இது ரியல் எஸ்டேட் மூலம் கிடைத்த லாபத்தைவிட ரூ.1 கோடி அதிகம்.

இந்த ஆன்லைன் மீட்டிங்கில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் பின்வரும் லிங்கினை கிளிக் செய்து தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்!

https://labham.money/events/webinar-may20-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_may20_2026

இந்த சி.ஏ.ஜி.ஆர் முறையில் கணக்கு போட்டு லாபத்தைத் துல்லியமாக அளப்பது கடினம் என்று நினைக்காதீர்கள். கூகுள் சர்ச்சில் CAGR Calculator என்று டைப் செய்தால் பல நிறுவனங்களின் கால்குலேட்டர்கள் வரும். அதில் ஒன்றை கிளிக் செய்து, ஆரம்ப முதலீடு எவ்வளவு, எத்தனை ஆண்டுகள் முதலீடு, முடிவில் பெறும் தொகை எவ்வளவு என்று சொன்னால், உங்களுக்குக் கிடைக்கும் லாபம் ஆண்டுதோறும் எவ்வளவு என்பதை சதவிகிதக் கணக்கில் துல்லியமாக சொல்லிவிடும்.

இனியும் இந்த சி.ஏ.ஜி.ஆர் முறையில் நீங்கள் உங்கள் லாபத்தைக் கணக்கிடத் தவறினால், தவறான திட்டங்களில் பணம் போட்டு மிகக் குறைவான லாபத்தையே நீங்கள் சம்பாதித்துக் கொண்டிருப்பீர்கள். இதனால் பெரிய அளவில் உங்களால் பணம் சேர்க்க முடியாமல் போகும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்!

ஆலோசனை

முதலீட்டு   ஆலோசனை   வேண்டுமா?

வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தங்கள் முதலீட்டை சரியானபடி அமைத்துக்கொள்ள 'லாபம்' மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்ரிபியூஷன் நிறுவனம் முதலீட்டு ஆலோசனை தருகிறது. உங்களுக்கும் முதலீட்டு ஆலோசனை வேண்டும் எனில், பின்வரும் லிங்கினைக் கிளிக் செய்து, உங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள்...

NRI Calendly - https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-nri

லாபம் வாட்ஸ் அப் குரூப்பில் இணைய விருப்பமா? இந்த லிங்க்கை கிளிக் செய்யுங்கள்!

https://labham.money/events/webinar-apr18-2026?utm_source=labham_whatsapp&utm_medium=whatsapp_group&utm_campaign=webinar_apr18_2026

Labham Youtube Video: www.youtube.com/@labham_money

Labham Website: https://labham.money/tamil

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User