புதிய கட்சி தொடக்கமா? டெல்லி பறக்கும் அண்ணாமலை! - பின்னணி என்ன?

Jun 01, 2026 - 15:31
0
புதிய கட்சி தொடக்கமா? டெல்லி பறக்கும் அண்ணாமலை! - பின்னணி என்ன?

தமிழ்நாடு அரசியல் களம் தற்போது பல அதிரடி திருப்பங்களைச் சந்தித்து வரும் நிலையில், தமிழக பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலை புதிய கட்சி தொடங்கப் போகிறார் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தச் சூழலில் தான் அண்ணாமலை டெல்லி பயணம் மேற்கொள்ள இருப்பதாக வெளியாகும் செய்தி கவனம் பெற்றிருக்கிறது.

அண்ணாமலை
அண்ணாமலை

கவனம் ஈர்த்த அண்ணாமலை

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து தொடர்ந்து குரல் கொடுப்பது, குறிப்பாக தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் சம்பவத்தின் தன்னை சாட்டையால் அடித்துகொண்டது, 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டது, அரசியல் படிபபிற்காக வெளிநாடு சென்றது என பல விஷயங்கள் மூலம் கவனத்தைப் பெற்று தமிழகத்தில் பாஜக இருப்பை பதிவு செய்துகொண்டே இருந்தார் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை.

கருத்து மோதல்கள்...

இருப்பினும், அண்ணாமலைக்கும் அதிமுகவிற்கும் இடையே ஏற்பட்ட கடுமையான கருத்து மோதல்களின் காரணமாக நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது அவர் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார்.

இந்தத் தலைமை மாற்றத்தைத் தொடர்ந்து தமிழக பாஜகவிற்குள் உட்கட்சிப் பூசல்களும், நிர்வாகக் குளறுபடிகளும் அரங்கேறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் அண்ணாமலை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் முழுமையாக விலகிக்கொண்டார்.

2021 சட்டமன்றத் தேர்தலில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த பாஜக, சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் வெறும் 1 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்று பெரும் பின்னடைவைச் சந்தித்தது.

எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை - அ.தி.மு.க - பா.ஜ.க
எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை - அ.தி.மு.க - பா.ஜ.க

பதவி கொடுக்காத பாஜக

இதனிடையே சிபிஎஸ்இ விவகாரத்தில் விமர்சித்து கருத்து வெளியிட, அண்ணாமலை விரைவில் தனிக்கட்சி தொடங்கப்போகிறார் என்ற கருத்துகள் தீவிரமடைந்தன.

மாநிலத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அவருக்கு, தற்போது வரை கட்சியிலோ அல்லது மத்திய அரசிலோ எந்தவொரு பொறுப்பும் வழங்கப்படவில்லை.

மறுபுறம், தற்போதைய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினைச் சந்தித்து, தான் அதே பதவியில் தொடர விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அதற்குத் தேசியத் தலைமை சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அண்ணாமலைக்கு மீண்டும் மாநிலத் தலைவர் பதவி கிடைப்பது சந்தேகமாக மாறியுள்ளது.

ஆலோசனையில் அண்ணமாலை

இந்த இக்கட்டான சூழலில்தான், தனிக்கட்சி ஆரம்பிக்கும் முடிவை நோக்கி நகர்ந்துள்ள அண்ணாமலை, ‘வாழும் கலை’ அமைப்பின் நிறுவனரான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரைச் சந்தித்துச் சமீபத்தில் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.

மேலும், தன் வாழ்க்கையின் எந்தவொரு முக்கிய முடிவை எடுப்பதற்கு முன்பும் இமயமலைக்கு ஆன்மிக யாத்திரை செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ள அண்ணாமலை, இந்த முறையும் நேபாளத்திற்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டு திரும்பியுள்ளார்.

அண்ணாமலை - நிதின் நபின்
அண்ணாமலை - நிதின் நபின்

நிதின் நபினுடன் சந்திப்பு

வரும் ஜூன் 4-ம் தேதி, தனது புதிய கட்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகிவுள்ளது.

நாளை பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்து ஆலோசிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த சந்திப்புக்கு பிறகு அரசியலின் அடுத்தக்கட்ட நகர்வு குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User